
தமிழ்நாட்டில் 2026-2027 கல்வி ஆண்டுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்களுக்குக் குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவதோடு, புத்தாண்டுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான திட்டமிடலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அரையாண்டுத் தேர்வு தேதிகள் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேர்வுத் தயாரிப்புகளுக்கான கால அவகாசம் மற்றும் பாடத்திட்ட நிறைவு குறித்துப் பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வெளியாகியுள்ள தகவல்களின்படி, டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளன.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்த பின்னர், ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்பத் தேர்வுத் தேதிகளில் மாறுபாடுகள் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறலாம் எனவும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 15 அல்லது 16-ஆம் தேதி வாக்கில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு முன்னதாகத் தேர்வுகள் தொடங்கும் வகையில் இந்த அட்டவணை அமையக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
