
கோவையைத் தொடர்ந்து, மதுரையில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் போலியான புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பொருளாதார அறிஞரான ஜீன் டிரெஸ் எழுதியதாகக் கூறி, ‘DEMOCRACY & PEOPLES RIGHT IN THE CONTEMPORARY WORLD’ என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்று மதுரை கலைஞர் நூலகத்தின் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து அறிந்த பொருளாதார அறிஞர் ஜீன் டிரெஸ், எனது பெயரில் இப்படி ஒரு புத்தகம் நூலகத்தில் இருந்தால் அது கண்டிப்பாக போலியான ஒன்றுதான் என்று கூறி அரண்டு போயுள்ளார்.
மேலும், நான் இதுபோல ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் எழுதியதே இல்லை என்றும், தனது பெயரைப் பயன்படுத்தி யாரோ போலியான புத்தகத்தை உருவாக்கி நூலகத்தில் வைத்துள்ளதாகவும் அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் உள்ள உலகத்தரமான அரசு நூலகத்தில் போலியான நூல்கள் இடம்பெற்றிருப்பது, நூலகப் பராமரிப்பு மற்றும் புத்தகங்கள் வாங்கியதில் நடந்துள்ள குளறுபடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
