ஷேக் ஹசீனா நாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியா நிபந்தனை விதிக்க முடியாது என பங்களாதேஷ் திட்டவட்டம்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியா எந்தவித நிபந்தனையும் விதிக்க முடியாது என்றும், சட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.
