அதிக விலைக்கு விற்கப்பட்ட காலத்தில் தங்க நகைகளை வாங்கி, தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்திருப்பவர்கள் இப்போது தங்கத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் வஙடகியில் வாங்கிய நகைக்கடன் மதிப்பு என்ன ஆகும்?

கடன் வாங்கியவர்களுக்கு ஏற்படக் 4டிய நெருக்கடிகள் என்ன? என்பது போன்ற சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது உங்கள் அனைவருக்கும் மிக மிக அவசியம்.

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 31.03.2026 நிலவரப்படி சுமார் ₹11.32 லட்சம் கோடி தங்கக் கடன் நிலுவையில் உள்ளது.

மாநில வாரியான தங்கக் கடன் நிலுவையில் முதலிடத்தில் தமிழ்நாடு!

தமிழ்நாடு – ₹4,11,656 கோடி

ஆந்திரப் பிரதேசம் – ₹2,22,953 கோடி

கர்நாடகா – ₹98,962 கோடி

தெலங்கானா – ₹92,394 கோடி

கேரளா – ₹83,657 கோடி

தங்கத்தின் சந்தை விலை குறையும்போது அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தற்போதைய மதிப்பும் குறையக்கூடும்.

இதனால் குறிப்பிட்ட கடன் ஒப்பந்தங்களின்படி சிலருக்கு கூடுதல் அடமானம் அல்லது பகுதி கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை:

உங்கள் தங்கக் கடனின் தற்போதைய நிலுவைத் தொகையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
கடனுக்கான வட்டி மற்றும் காலக்கெடுவைச் சரிபாருங்கள்.
கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
நகைகள் ஏலம் விடப்படும் அபாயம் இருப்பின் உடனடியாக வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்.

தங்கத்தின் விலை குறைந்துவிட்டது என்பதற்காக அனைவருடைய நகைகளும் ஏலம் விடப்படும் என்று அர்த்தமில்லை. கடன் ஒப்பந்தம், திருப்பிச் செலுத்தும் நிலை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விதிமுறைகளே முக்கியம். கூடுதல் அடமானம் அல்லது பகுதி கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஆகியவை குறித்து உடனடியாக உங்களது வங்கி மேலாளரை அணுகி ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கலை உணர்ந்து வங்கிக்கு ஒத்துழைப்பு வழங்கி உங்களது கடன் சுமையை குறைத்துக் கொள்ள ஆக வேண்டிய காரியத்தை பாருங்கள். பதட்டம் ஏதும் வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *