
3 ஆவதுஅகில இந்திய ரிங் டென்னிஸ் போட்டிகள் ராஜஸ்தான் மாநிலம் கரோவலி மாவட்டத்தில் 26-11-2026 முதல் 29-11-2026 வரை நடைபெற உள்ளது.
முன்னதாக தமிழ்நாடு ரிங் டென்னிஸ் அசோசியேசன் சார்பாக நடைபெற்ற தமிழக அணிக்கான தேர்வு போட்டிகளில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி புள்ளியல் துறை முதலாம் ஆண்டு மாணவி எம்.மீனலோசனி கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி 8 பேர் கொண்ட ரிங் டென்னிஸ் சீனியர் பெண்கள் தமிழக அணியில் இடம் பெற்று அகில இந்திய போட்டிகளில் தமிழக அணியின் சார்பாக பங்கேற்க உள்ளார்.
பாராட்டு
3 வது சீனியர் அகில இந்திய ரிங் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ராஜஸ்தான் செல்லும் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி புள்ளியல் துறை மாணவி மீனலோச்சினிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்கள் அகில இந்தியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தேர்வு கடிதத்தை தேர்வு கடிதம் மற்றும் விளையாட்டு சீருடைகளை வழங்கி, வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு பாலமுருகன், அனைத்து துறைபேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் , விளையாட்டு ஆர்வலர்கள் கலந்துகொண்டு விளையாட்டு வீராங்கனையை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
*எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு*
அகில இந்திய ரிங் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீராங்கனை மீனலோச்சினிக்கு தர்மபுரி ரோட்டரி எலைட் சங்கத்தின் சார்பாக, விளையாட்டு திறமையை ஊக்குவி விக்கும் வகையில் ஊக்கத்தொகை 10,000 ரூபாயினை, அதன் நிர்வாகிகள் தலைவர் ரொட்டேரியன் திரு ஜீவன், செயலாளர் திரு.சுரேஷ் மற்றும் ரோட்டரி எலைட் நிர்வாகிகள் திரு விக்ரமன், திரு வெங்கட், திரு மணிமாறன், திரு ரகுநாதன், ஆகியோர் வழங்கி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
