
1, 427 கோடி மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனை உடனடியாக கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள தகவல், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், குற்றத்தை நிரூபிக்கக்கூடிய 825 முக்கியமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஆவணங்கள் மட்டுமின்றி, 11 மின்னணு சாதனங்கள் மற்றும் 3 வங்கி லாக்கர்களை அதிகாரிகள் சோதனையிட்டு பறிமுதல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட இந்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், துரைமுருகனுக்கு எதிரான வழக்கை வலுப்படுத்தி, விரைவில் கைது வாரண்ட் பிறப்பிப்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சியில், முன்னாள் அமைச்சர் துரைமுருகனைச் சுற்றி லஞ்ச ஒழிப்புத்துறை வலை வீசியுள்ளதால், எதிர்க்கட்சியான திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
