
அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபதி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க.முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதையடுத்து, அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனுவை 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன் படி அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை கடந்த 5ஆம் தேதி மதியம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு தொடங்கியது. அன்பில் மகேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதத்தை முன்வைத்தார். இதை கேட்ட நீதிபதிகள் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று சற்று முன்பு அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு வந்தது. அந்த வகையில் அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அன்பில் மகேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
