இந்திய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீடு புதன்கிழமை வர்த்தக முடிவில் 210 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சர்வதேச சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களின் ஆதரவால் வர்த்தகம் முழுவதும் காளையின் ஆதிக்கம் காணப்பட்டது.
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் 25,337.80 புள்ளிகளுடன் தொடங்கிய முக்கிய பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டி குறியீடு 25,255.05 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இது முந்தைய வர்த்தக தினத்தின் முடிவான 25,044.65 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 210.40 புள்ளிகள் அல்லது 0.84 சதவீத உயர்வாகும். இன்றைய வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 25,424.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 25,095.35 புள்ளிகள் வரையிலும் சென்றுள்ளது. நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள 37 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், 13 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
துறைசார் குறியீடுகள் மற்றும் நிஃப்டி குறியீடு வளர்ச்சி
இன்றைய வர்த்தகத்தில் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகள் முன்னணியில் இருந்து சந்தையை வழிநடத்தின. குறிப்பாக நிஃப்டி வங்கி குறியீடு 1,051.15 புள்ளிகள் (1.76%) உயர்ந்து 60,792.40 புள்ளிகளில் நிலைபெற்றது. பொதுத்துறை வங்கிகள் குறியீடான நிஃப்டி பிஎஸ்யு வங்கி 261.85 புள்ளிகள் (2.94%) அதிகரித்து 9,167.20 புள்ளிகளை எட்டியது. ஆட்டோமொபைல் குறியீடு 597.40 புள்ளிகள் (2.14%) உயர்ந்து 28,523.30 புள்ளிகளாகவும், எஃப்எம்சிஜி துறை 527.90 புள்ளிகள் (1.13%) உயர்ந்து 47,188.55 புள்ளிகளாகவும் நிலைபெற்றன.
அதேசமயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பார்மா துறைகளில் மிதமான விற்பனை அழுத்தம் காணப்பட்டது. நிஃப்டி ஐடி குறியீடு 173.30 புள்ளிகள் சரிந்து 32,295.60 புள்ளிகளிலும், பார்மா குறியீடு 119.65 புள்ளிகள் குறைந்து 28,776.45 புள்ளிகளிலும் முடிவடைந்தது. ரியாலிட்டி குறியீடும் 3.75 புள்ளிகள் குறைந்து 893.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.
அதிக லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த முக்கிய பங்குகள்
நிஃப்டி 50 குறியீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா (M&M) பங்கு அதிகபட்சமாக 5.30 சதவீதம் உயர்ந்து ரூ.3,465 விலையில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இண்டிகோ 4.33 சதவீதம் உயர்ந்து ரூ.5,665 விலையிலும், டிரென்ட் 3.32 சதவீதம் அதிகரித்து ரூ.3,222.70 விலையிலும் வர்த்தகமாயின. டாடா ஸ்டீல் 2.40 சதவீதமும், பிஎஸ்இ 2.34 சதவீதமும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்தன.
மறுபுறம், அதானி போர்ட்ஸ் பங்கு 1.84 சதவீதம் சரிந்து ரூ.1,907 விலையில் வர்த்தகமானது. ஐசிஐசிஐ வங்கி 1.10 சதவீதம் சரிந்து ரூ.1,571.60 விலையிலும், டெக் மஹிந்திரா 0.91 சதவீதம் சரிந்து ரூ.1,788.50 விலையிலும் நிலைபெற்றன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (0.85%) மற்றும் நெஸ்லே இந்தியா (0.76%) நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளிலும் நல்ல எழுச்சி நீடித்தது. நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 496.55 புள்ளிகள் (0.81%) உயர்ந்து 61,519.10 புள்ளிகளிலும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 304.30 புள்ளிகள் (1.59%) உயர்ந்து 19,489.35 புள்ளிகளிலும் முடிவடைந்தன. வங்கித்துறை பங்குகள் காட்டிய வலிமை காரணமாக நிஃப்டி குறியீடு மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்பியுள்ளது. முதலீட்டாளர்களின் தொடர் ஆதரவால் நிஃப்டி குறியீடு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: அந்நிய முதலீட்டாளர்கள் வருகை: 8 மாத உச்சத்தில் பங்குச்சந்தை அபார சாதனை!
குறிப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே. பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரைக் கலந்தாலோசிக்கவும்.
