செப்டோலெசண்ட் (Septolescent).

என்கிற இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

70 வயதை கடந்தும், 17 வயது இளைஞனின் உற்சாகத்துடன் வாழ்பவர்களைத் தான் Septolescent என்கிறார்கள்.

Septo என்றால் 70 ப்ளஸ், Adolescent என்றால் டீன்-ஏஜ். இரண்டும் சேர்ந்தது தான் இந்த அழகான வார்த்தை.

70 வயதை தாண்டியதும் நம்மில் பலர் நாம் எக்ஸ்பைரி தேதிக்கு அருகில் வந்துவிட்டோம் என்று நினைத்து சுருண்டு விடுகிறார்கள்.

ஆனால் Septolescent-கள் அப்போது தான் தனக்கு 17-வது வயது தொடங்குவதாக நினைத்து ஒரு புதிய வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள்.

அதாவது,

அவர்கள் எப்போதும் பிஸியாக இருப்பார்கள்.புத்தகம், தோட்டம், எழுத்து என்று.

பழைய நட்பை விடமாட்டார்கள் – வாரத்திற்கு மூன்று தடவையாவது நண்பர்களை சந்தித்து ஒரு காபியாவது குடிப்பார்கள்.
வெளியூர் பயணங்களை நேசிப்பார்கள் – ரயில், பஸ் எதுவாக இருந்தாலும் ஜன்னலோரம் உட்கார்ந்து இயற்கையை காதலிப்பார்கள்.
உறவுகளை மதிப்பார்கள் – அனைவரும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.

சாதாரண ஜோக் சொன்னாலும் வாய்விட்டு சிரிப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளை நண்பனாக பாவித்து
பேசுவார்கள்.

நடைப்பயிற்சி, ஆரோக்கிய உணவு, நன்றியுணர்வு, சிரிப்பு,இவை தான் அவர்களின் சொத்து.

வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. எது நடந்தாலும் நன்மைக்கே
என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, முதுமையோடு செல்லமாக சண்டை போட்டு கை குலுக்குவார்கள்.

உடம்புக்கு ஏதேனும் நோய் வந்துவிட்டால், டாக்டர் தரும் மருந்துகளோடு பாசிட்டிவ் எண்ணங்களையும் கலந்து சாப்பிட்டு, அதிலிருந்து மீண்டு மறுபடியும் 17-வது வயதுக்கு வந்துவிடுவார்கள்.

பி. கு.
வயதான காலத்தில்
எப்படி வாழ்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
ஆதார் கார்டு உங்களுக்கு 70 வயது என்று சொன்னாலும்
உங்கள் ஆட்டிட்யூட் 17 ஆக இருந்தால்
நீங்கள்தான் ராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *