மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி

மகளிர் பிரீமியர் லீக் 2027 தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. ஐந்தாவது சீசனான இந்தத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வதோதரா மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்கள் இந்தத் தொடரின் போட்டிகளை ஏற்று நடத்துகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மகளிர் பிரீமியர் லீக் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் விவரங்கள்

மொத்தம் 22 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் வதோதரா மற்றும் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியம் ஆகிய இரண்டு மைதானங்களில் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. ஜனவரி 14 முதல் 24 வரை முதல் கட்டப் போட்டிகள் வதோதராவில் நடைபெறுகின்றன. அதன் பிறகு போட்டிகள் மும்பைக்கு மாறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ தரப்பில் ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடக்க ஆட்டம் மற்றும் இறுதிப்போட்டி

ஜனவரி 14 அன்று வதோதராவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வதோதராவில் 11 லீக் ஆட்டங்கள் முடிவடைந்ததும், ஜனவரி 26 முதல் பிப்ரவரி 3 வரை மும்பை பிராபோர்ன் மைதானத்தில் மீதமுள்ள லீக் போட்டிகள் நடைபெறும். பிப்ரவரி 5-ல் எலிமினேட்டர் ஆட்டமும், பிப்ரவரி 7-ல் பிரம்மாண்ட இறுதிப்போட்டியும் மும்பையில் நடைபெறுகிறது.

இந்த சீசனில் பங்கேற்கும் நட்சத்திர வீராங்கனைகளின் ஆட்டத்தை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஒவ்வொரு போட்டியும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களை விட இந்த முறை கூடுதல் பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூலமாக இளம் வீரிகளுக்கு சர்வதேச அளவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பல்வேறு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் கிரிக்கெட் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நமன் தீர் அபார ஆட்டம்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *