மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு லோக்சபாவில் நடைபெறுகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். தற்போது மத்திய அரசிடம் இந்த பலம் இல்லை என்பதால், மசோதா நிறைவேற்றம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முன்னதாக நேற்றிரவு மத்திய அரசு, மகளிர் இடஒதுக்கீடு சட்டம் ஏப்.16 முதல் அமலுக்கு வருவதாக அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது அமல்படுத்தப்பட வேண்டும் எனில், 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026 நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசிடம் போதுமான பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 minute ago

லோக்பசாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது. மசோதா மீதான வாக்கெடுப்பில் 489 எம்பிக்கள் பங்கேற்றனர். மசோதாவுக்கு ஆதரவாக 278 பேர் வாக்களித்தனர். எதிராக 211 பேர் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் லோக்சபாவில் மசோதா தோல்வியடைந்தது.

6 minutes ago

மகளிர் இடஒதுக்கீட்டுக்கான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026, மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill 2026) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 ஆகியவற்றின் மீது லோக்சபாவில் ஓட்டெடுப்பு தொடங்குகிறது. 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு இருந்தால் இந்த மசோதா வெற்றி பெறும்.

24 minutes ago

140 கோடி மக்களின் மனதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன் – அமித்ஷா

34 minutes ago

மதஅடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது – அமித்ஷா அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இல்லை. ஆனால் காங்கிரஸ் சமாதானப்படுத்தும் அரசியலை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் அரசு, இட ஒதுக்கீட்டுக் குழுக்களின் பணிகளை முடக்குவதோவு, அவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது – அமித்ஷா

44 minutes ago

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தங்களின் வாக்குகள் இன்றி தோல்வியடைந்து விடும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால் மசோதாவை தோல்வியடைய விடமாட்டேன் – அமித்ஷா

46 minutes ago

அமித் ஷாவின் ‘வடக்கு-தெற்கு பிளவு’ குறித்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 46 minutes ago ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதப்பட்டது. தொகுதி மறுவரையறை என்பது தென்மாநிலங்களுக்கு எதிரானது இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தெற்கு VS வடக்கு என்று பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கின்றன – அமித்ஷா

1 hour ago

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வருகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அது, இது என்று கூறி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வருகின்றன – அமித்ஷா

1 hour ago

1972ம் முதல் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொகுதி மறுவரையறை முக்கியம் – அமித்ஷா 1 hour ago எதிர்க்கட்சிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கவில்லை, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டையே எதிர்க்கின்றன. தொகுதி மறுவரையறையை எதிர்ப்பது என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை அதிகரிப்பதை எதிர்ப்பதாகும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சம பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகவே தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது – அமித்ஷா

1 hour ago

மகளிர் நலனுக்காகவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன- அமித் ஷா 1 hour ago மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை ‘இந்தியா’ கூட்டணியைத் தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை – அமித் ஷா

1 hour ago

தொகுதி மறுவரைவுக்கு பின் பெண்களுக்கு இடஒதுக்கீடு – அமித்ஷா பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், சரிக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்குவதற்காகவும் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது . தொகுதி மறுவரையறைப் பணிகள் நிறைவடைந்த பின்னரே, நாங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவருவோம் – அமித்ஷா

1 hour ago

லோக்சபாவில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலுரை வழங்கி வருகிறார்

2 hours ago

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா மாலை 6 மணிக்கு லோக்சபாவில் உரையாற்றுகிறார்.. 3 hours ago தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் 4 மணிக்கு வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில், அது தாமதம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள் துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் உரையாற்றவுள்ளார். அதன் பிறகே வாக்கெடுப்பு நடக்கும் என தகவல்!

4 hours ago

மத்திய அரசின் மசோதாக்களால் தேசம் தாக்கப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம்- ராகுல் காந்தி 4 hours ago தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்று தெரிந்தும் பீதியில் பாஜக அரசு இதை கொண்டு வந்துள்ளது- ராகுல் காந்தி 4 hours ago பாஜகவினர் தங்களை ராணுவம் என்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் என்றும் நினைத்து கொள்கிறார்கள்- ராகுல் காந்தி

4 hours ago

நீங்கள் சாதாரண ஒரு அரசியல் கட்சி; ராணுவமோ ஒட்டுமொத்த இந்திய மக்களோ இல்லை- ராகுல் காந்தி

4 hours ago

நாங்கள் இந்திய மக்களை எதிர்க்கவில்லை.. பாஜக என்ற அரசியல் கட்சியை தான் எதிர்க்கிறோம்- ராகுல் காந்தி

4 hours ago

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரை

4 hours ago

இந்திய வரைபடத்தையே மாற்ற பாஜக முயல்கிறது- ராகுல் காந்தி 4 hours ago தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்து சொல்வதால் மத்திய அரசுக்கு ஏன் கசக்கிறது- ராகுல் காந்தி 4 hours ago மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவே கிடையாது- ராகுல் காந்தி 4 hours ago இந்திய பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் வெட்கக்கேடான செயலை பாஜக செய்கிறது- ராகுல் காந்தி 7 hours ago மக்களவை சபாநாயகருக்கு நச் பதிலடி கொடுத்த திமுக எம்பி கனிமொழி ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியிருக்கிறார் என்று நேற்று டி.ஆர்.பாலு பேசியிருந்தார் கருப்புக்கொடி ஏற்றினால் எனக்கு என்ன? என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டிருந்தார் கருப்புக்கொடி என்பது போராட்டத்தின் அடையாளம் என கனிமொழி எம்பி விளக்கம் கனிமொழியின் விளக்கத்தை கேட்டு சபாநாயகர் ஓம் பிர்லா சைலண்ட்

7 hours ago

மக்களவை சபாநாயகருக்கு நச் பதிலடி கொடுத்த திமுக எம்பி கனிமொழி எம்பி: ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியிருக்கிறார் என்று நேற்று டி.ஆர்.பாலு பேசியிருந்தார். கருப்புக்கொடி ஏற்றினால் எனக்கு என்ன? என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டிருந்தார். இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி, கருப்புக்கொடி என்பது போராட்டத்தின் அடையாளம் விளக்கமளித்துள்ளார். கனிமொழியின் விளக்கத்தை கேட்டு சபாநாயகர் ஓம் பிர்லா சைலண்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *