
திமுக ஆட்சி அதிகாரத்தை இழக்கும் போதெல்லாம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஆட்சி ஆறு மாதம் தான் விரைவில் கவிழ்ந்து விடும் என்பது இவர்களின் ஆருடமாக இருக்கிறது.
நாட்டில் நல்லாட்சி நடந்து கொண்டிருந்தாலும் அதைக் கெடுப்பதற்கென்று பல்வேறு திட்டங்களைத் தீட்டி சதி செயல்களில் ஈடுபடுவது திமுகவின் வழக்கமாக இருக்கிறது. அதற்கு விஜய் அரசு விதிவிலக்கு அல்ல.
தற்போது TVK அரசில் அங்கம் வகித்துள்ள திமுக கூட்டணி கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் நம்முடன் இணையலாம் என்கிற நப்பாசையில் அதற்கான காய்களை நகர்த்தி வருவது மட்டுமல்லாமல் TVK கட்சி சார்ந்த எம்எல்ஏக்களை விலை பேசி வருவதும் பதவி சுகம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியவில்லை என்பது தான் காட்டுகிறது.
தாங்கள் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் நாட்டையே சுரண்டி பிழைக்க வேண்டும் வேறு யார் வந்தாலும் அவர்களை ஆள விடக்கூடாது, தொடர்ந்து தொல்லை கொடுப்பது தான் இவர்கள் கொள்கையாக இருக்கிறது. இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி தமிழக அரசியல் களம் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விசிக மீண்டும் திமுக கூட்டணியுடன் இணையும் பட்சத்தில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் அதே பாதையைப் பின்பற்றி திமுக பக்கம் திரும்ப வாய்ப்புகள் அதிகம் என்று பேசப்படுகிறது.
ஆனால், இந்த மேஜிக்கைவிட பெரிய பேசுபொருளாக இருப்பது அதிமுக மற்றும் திமுக இடையிலான இணக்கம் குறித்த தகவல்தான். இந்த இரு துருவங்களும் கைகோர்த்தால் மட்டுமே தவெக-வின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது அரசியல் விமர்சகர்களின் பொதுவான பார்வையாக உள்ளது.
அதிமுக மற்றும் திமுக இணையும் ஒரு அசாதாரண சூழல் உருவானால், அது தவெக ஆட்சியை வீழ்த்துவதற்கான ஒரே வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. அப்படி ஆட்சி கவிழ்ந்தால், எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பை ஏற்பாரா அல்லது உடனடியாக மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஒருவேளை மீண்டும் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டால், அது தவெக-வின் பிரம்மாண்ட வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மக்கள் விஜய்யின் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆதரவும் இப்போதைக்கு குறையாது என்பதே நிதர்சனம்.
இந்த அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசும் விமர்சகர்கள், தவெக-வின் வளர்ச்சியைப் பார்த்துப் பாரம்பரியக் கட்சிகள் மிரண்டு போயுள்ளதாகக் கருதுகின்றனர். ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டாலும், மீண்டும் களம் காணும் தேர்தலில் தவெக 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று கணிப்புகள் கூறுகின்றன. மக்களின் மனநிலை முற்றிலும் விஜய்க்கு ஆதரவாக இருப்பதால், எந்த மாதிரியான அரசியல் சூழ்ச்சிகளைத் திராவிடக் கட்சிகள் முன்னெடுத்தாலும், அது தவெக-வை பாதிக்காது என்பதுதான் தற்போதைய சூழல்.
