தர்மபுரி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 04-09-2026 அன்று தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் , தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு வரலாற்று துறை மாணவி *எம்.வசந்தி* ,
*1500 மீட்டர் ஓட்ட போட்டியில்* மாவட்ட அளவில் *முதலிடம்* பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாவட்ட தடகள சங்கத்தால் வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் முனைவர் கோ
கண்ணன் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

மாநிலப் போட்டிக்கு தகுதி*
மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி எம்.வசந்தி,
அக்டோபர் மாதம், திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்.



*சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர்  இறகுப்பந்து போட்டிகளில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி ஆடவர் இறகுப்பந்து அணி நான்காம் இடம்.*


 சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான இறகு பந்து போட்டிகள் சென்ற வாரம் திருச்செங்கோடு
கே எஸ் ஆர் கல்லூரியில் நடைபெற்றது.
19 அணிகள் பங்கு பெற்றதில்,
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி ஆடவர் இறகு பந்து அணி பங்கேற்று நான்காம் இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


  வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தகுதி சான்றிதழ்கள் மற்றும் கோப்பையை இன்று 09-09-2026 *கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன்* அவர்கள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் உடற் கல்வி இயக்குனர் முனைவர் கு பாலமுருகன்,
பேராசிரியர்கள்,
விஜயதேவன்,கிருபாகரன், பிரபாகரன்
ஶ்ரீதர்,கலந்து கொண்டு வாழ்த்தினார்.

அனைத்து துறை தலைவர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முனைவர் கு. பாலமுருகன்
உடற்கல்வி இயக்குனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *