STEAM கல்வி முறைக்கு தமிழ்நாடு மாற இருக்கிறது. கதைகளின் வழியே கணிதத்தை கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். எந்த அளவிற்கு புத்தகப்பை சுமை குறைகிறதோ அந்த அளவிற்கு மாணவர்களின் மனச்சுமை குறையும். நிலாவிற்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை எடுத்துச்சென்றிருப்பார்; அதனைவிட பள்ளி மாணவர்கள் அதிகம் சுமக்கின்றனர்

இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது; கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம்.

-மாணவர்களின் புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும்; பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் மற்றும் கதைகளின் வடிவில் மாணவர்களுக்கு எளிதாக கணிதம் கற்றுத்தரப்படும்.

தமிழ்நாடு பள்ளிச் கல்வித்துறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும் வகையில், மாநிலத்தின் கல்வி முறை STEAM (Science, Technology, Engineering, Arts, Mathematics) கல்வி முறைக்கு மாற்றப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

STEAM கல்வி முறை: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படும்.

கதைகள் வழியே கற்றல்: குறிப்பாக, மாணவர்களுக்குக் கடினமாக இருக்கும் கணிதம் போன்ற பாடங்கள் கதைகள் மற்றும் செயல்பாடுகள் மூலமாக எளிமையாகக் கற்பிக்கப்படும்.

புத்தகப் பை சுமை குறைப்பு: மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க அவர்களின் புத்தகப் பையின் சுமை வெகுவாகக் குறைக்கப்படும்.

வண்ணமயமான பாடநூல்கள்: பாடப் புத்தகங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ணப் படப் புத்தகங்களாக மாற்றப்படும்.

பாடதிட்ட தயாரிப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *