கிருஷ்ணகிரியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது 135 வது பிறந்தநாள் விழா இந்த நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இந்த நிலையில் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவ சிலைக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.,

இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் மாநில மொழியில் இணைச் செயலாளர் பரித நவாப் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பாஜக பாமக புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *