கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாள்தோறும் 30 கிராமங்களை பட்டியலிட்டு கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பை நிறைவு செய்துள்ளார். தமிழக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகள் மற்றும் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை கேட்டு வருகிறார்.
அந்த வகையில் மேட்டுப்புலியூர் கிராமத்தில் திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் வாக்குகளை சேகரித்த போது அவர் பேசியதாவது ;
நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலமைச்சர் பழனிசாமி அதிர்ஷ்டசாலி ஆவார்.
மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் கொடுக்க முடியாது என கூறிய பழனிச்சாமி தற்போது 2000 ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
ஏமாற்றி ஆட்சியைப் பிடித்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்து விடலாம் என கனவு காண்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தோற்கடித்த தொகுதி பர்கூர் தொகுதி இந்த தொகுதியில் தப்பு செய்தால் தண்டனை உண்டு.
மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் நரேந்திர மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும் சேர்ந்து 125 நாட்களாக மாற்றி அதற்கு உண்டான ஊதியத்தை 2000 கோடியை வழங்காமல் உள்ளனர். இதன் காரணமாக மக்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை உள்ளதை கிராம மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய எம்ஜிஆர் நம்முடைய முக ஸ்டாலின் என புகழாரம் சூடினார்,
G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
