கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக, கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான K. P. முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டு வந்த அவர், மதிய உணவு இடைவேளையின் போது மரத்தடியில் அமர்ந்து எளிமையாக உணவருந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பெண்களிடம் அதிமுக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, அங்கிருந்த ஒரு பெண் உணர்ச்சிவசமாக மைக்கைப் பிடித்து தானே பேச முன்வந்து, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த பிரசாரம், வேப்பனப்பள்ளி தொகுதியில் அரசியல் சூழலை மேலும் சுறுசுறுப்பாக மாற்றியுள்ளது..
G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்
