கிருஷ்ணகிரியில் மா உற்பத்தியாளர் சங்கத்தின் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு
ரூ 30 ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தமிழக விவசாய சங்க அலுவலகத்தில்
மா உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் ஆலோசகர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் அனுமந்த்ராசு
முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கலந்துக் கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து
விளக்க உரை ஆற்றினார்,
மேலும் இந்தக்கூட்டத்தின் போது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி மற்றும் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்,
வெளிநாடுகளுக்கு மா ஏற்றுமதி செய்வதில் உள்ள சட்ட திருத்தங்களை எளிமையாக்கிட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்,
பூச்சி கொல்லி மருந்துக்கள்
M.R.P விலையை விட பல மடங்குகள் உயர்த்தி விற்பனை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் கண்காணிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில்
கோவிந்தராசு,சின்னசாமி, குறட்டை முருகேசன்,சிவசங்கரன், கோவிந்தன் உள்ளிட்ட மா உற்பத்தியாளர் சங்க
நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
– G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்
