தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி வாகனங்கள் நாடு முழுக்க பட்டி தொட்டி எங்கும் குழந்தைகளை அழைத்து வந்து கல்வி கற்பிக்கும் பணியை மட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் செய்து வருகிறார்கள்..

இந்நிலையில் ஒரு மாவட்டத்தை, ஒரு வட்டத்தை ஒரு ஊராட்சியை கூட தாண்டாத  பள்ளிகளுக்கு ரூபாய் 3000 மதிப்புள்ள ஜி.பி. ஆர்.எஸ். கருவியை ரூபாய் 18000 அதிக விலை கொடுத்து வாங்கி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு போட்டு தனியார் கல்வி நிறுவனங்களை வாட்டி வதைக்கிறது..

அதுவும் அவர்கள் சொல்கின்ற இடத்தில் மட்டும் தான் வாங்க வேண்டும். வேறு எங்கும் வாங்க கூடாது..

GPRS கருவி பொறுத்த வில்லை என்றால் எப்.சி. செய்ய மறுக்கிறார்கள்…

இந்த GPRS கருவி அதிக விலைக்கு விற்பதில் RTO ஆர்.டி.ஓ.க்களுக்கு கூட பங்கு செல்கிறது..

தமிழ்நாடு முழுக்க ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பள்ளி வாகனங்கள் F.C. செய்ய ஒவ்வொரு பள்ளி நிர்வாகியும் ஒவ்வொரு வண்டிக்கும் குறைந்தது ரூபாய் பத்தாயிரம் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டும் … இது சம்பந்தமாக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு . விஜய் அவர்களுக்கு   புகார் செய்துள்ளோம்…

தமிழ்நாட்டு ஆர்.டி.ஓ.க்கள் உடனடியாக இந்த லஞ்சம் வாங்கும் போக்கை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அதை கண்டித்து *ஜூன் மாதம் முதல் வாரம்* தமிழ்நாடு முழுக்க தனியார் பள்ளி வாகனங்களை இயக்காமல் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்…

பள்ளி நிர்வாகிகள் யாரும் ரூபாய் 18000 கொடுத்து GPRS கருவியை பொருத்த வேண்டாம்…

அரசு போட்டுள்ள உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்..

அனைவரும் ஜூன் மாதம் போராட தயாராகுங்கள்…

உங்கள் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் ஆர்.டி.ஓ.க்கள் பெயர்களை உடனடியாக பதிவு செய்யுங்கள்…

சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் தந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்வோம்…

வழக்கறிஞர்.
கே. ஆர். நந்தகுமார்.
மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.
15.05.2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *