மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள்..
சங்கத் தலைவர்கள்.. அனைவருக்கும்
வணக்கம்…

2026.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போல் மாபெரும் மாற்றத்தை தந்திருக்கிறது….

கடந்த காலங்களில் தனியார் பள்ளிகளை வாட்டி வதைத்து புதிய புதிய சட்டங்கள் போட்டு …..பள்ளி நிர்வாகிகளுக்கு மாபெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி தொடர் அங்கீகாரம் கூட கடந்த ஐந்து ஆண்டுகளாக முறையாக வழங்காமல் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அங்கீகார ஆணைகள்… வழங்கி வந்தார்கள்..

கல்வித்துறை அமைச்சர் தொடங்கி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் வரை லஞ்சம் பெருக்கெடுத்து ஓடியது…

PTA பெயரில் ஒரு பக்கம் வசூல் வேட்டை…

பள்ளி வாகனங்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வேறு மாதந்தோறும் அனுப்ப வேண்டிய கட்டாயம்…
RTO…க்கல் ஒருபுறம் மிரட்டி வசூல் வேட்டை…

இந்த நிலையெல்லாம் மாறாதா ? என புலம்பித் தவித்த பள்ளி நிர்வாகிகளுக்கு மாற்றாக….

இன்றைக்கு மாண்புமிகு ..
தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்கள்… பொறுப்பேற்க உள்ளார்கள்…. அவர்களுக்கும் அவர்தம்  அமைச்சரவைக்கும்
நமது மாநில சங்கத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்….

இந்நிலையில் நமது தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்
இந்தாண்டு இன்னும் சிறப்பாக தனியார் பள்ளி நிர்வாகிகளின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு யாருக்கும் எதற்கும் எப்பொழுதும் பணம் வாங்கி கொடுக்காமல் நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து பேசி பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று முடிவெடுத்துள்ளோம்…

சட்டம் அனைவருக்கும் பொதுவானது.. பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் நிரந்தர அங்கீகாரம், நர்சரி, பிரைமரி பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவோம்… என்றெல்லாம் சொல்ல முடியாது..

அரசு விதிப்படி சரியாக உள்ள அனைத்து  பள்ளிகளுக்கும் *தொடர் அங்கீகாரம்*, *நிரந்தர அங்கீகாரம்*,
*தரம்  உயர்வு,* , கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கான**கட்டிட அனுமதி*  உட்பட்ட கோரிக்கைகள் பள்ளி வாரியாக மாவட்ட கல்வி அலுவலர் ,தனியார் பள்ளிகள இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆணைகளை உடனடியாக வழங்கச் சொல்லி வற்புறுத்துவோம்…

*பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே
அங்கீகார ஆணைகள்* என்றால்  அதற்கு எதிராக கடுமையாக போராட்டங்களை முன்னெடுப்போம்….

இனிவரும் காலங்களில் நமது சங்கம் இன்னும் முனைப்போடு செயல்படுவோம்…

பணம் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்களாக செயல்பட மாட்டோம்…

யாரிடமும் எதற்கும் பணம் கேட்க மாட்டோம்…

நமது சங்கத்தின் அங்கத்தினர்கள் யாரும் எதற்கும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்…..

நமது சங்க உறுப்பினர்கள் வேறு யாருக்கும் சந்தா பணம் கட்ட வேண்டாம்.

நீங்கள் பணம் கொடுத்து ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல…

பணம் கேட்கும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்  துறை அதிகாரிகளிடம்
புகார் செய்து உரிய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்…

நம்பிக்கை உள்ளவர்கள்.. நல்லவர்கள்… எங்களோடு வரலாம்.

நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து வர வேண்டாம்…

நமது வாட்ஸ் அப் குழுவில் இருந்தும் விலகிக் கொள்ளலாம்…

நமது சங்கத்தின் மாநில, மாவட்ட தலைவர்கள் தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் உத்வேகத்தோடும் சிறப்பாக பணியாற்றுங்கள்…

நமக்காக மத்திய, மாநில அரசுகள், நல்ல நேர்மையான அதிகாரிகள் துணை நிற்கின்றனர்…

வாழ்த்துக்களுடன் உங்கள்
கே. ஆர். நந்தகுமார். மாநில பொதுச்செயலாளர்.
05.05.2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *