திமுக ஆட்சி நடைபெற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டு கூட சரியான நேரத்தில் பள்ளிகள் திறந்ததாக சரித்திரம் இல்லை.

ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பள்ளிகள் திறப்பு ஜூன் 15 வரை தள்ளி வைத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கு காரணம் பொறுப்பற்ற ஆசிரியர் சங்கங்களும் சில சமூக விரோத அமைப்புகளும் தான். இவர்களுக்கெல்லாம் துணை போனது தமிழக அரசின் தவறான அணுகுமுறை தான். இதே நிலைதான் இப்போதும் நீடிப்பதாக தெரிகின்றது.

தமிழகத்தில் புதிய மாற்றம் வந்துள்ளது. இவர்களாவது ஒழுங்காக ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பழைய கதை போல் அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக பள்ளிகள் திறப்பை ஜூன் நான்காம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.

தற்போது வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், ஜூன் 4 பள்ளி திறப்பு தேதி மீண்டும் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்க வேண்டும் என்று இதுவரை எந்த பெற்றோரும் வேண்டுகோள் விடுத்ததாக தெரியவில்லை. ஆனால் சில சமூக விரோதிகள் பெற்றோர்கள் பெயரை தவறாக பயன்படுத்தி வெயில் மழையை காரணம் காட்டி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறுவது மிக மிக  மட்ட ரகமான செயல்.

கோடையும் குளிரும், மழையும் வெயிலும் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். இது காலத்தின் சுழற்சி இதை யாராலும் தடுக்க முடியாது. அந்தந்த பருவத்தில் அவை அதன் பணியை செய்து வருகிறது. இதற்கு ஏற்றபடி நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர காரணம் காட்டி தப்பிக்க கூடாது.

மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் புதிய ஆண்டில் புதிய வகுப்பில் உற்சாகமாக தொடங்கும்.

முதல் காலாண்டில் நடைபெறுகின்ற கல்வி செயல்பாடுகள் அரையாண்டிலும், 2nd. Term முழு ஆண்டிலும் 3rd. Term இருப்பதில்லை. வேறு விதமான செயல்பாட்டிற்கு மாற்றப்படுகிறார்கள். எனவே உரிய நேரத்துக்கு பள்ளிகள் திறப்பது தான் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

எனவே புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழக அரசு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போல் இல்லாமல் எதை ஒன்றையுமே சுயமாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த ஆட்சி நல்லாட்சியாக இருக்கும்.

யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் கேட்டுக் கொண்டு செயல்படுவது நல்ல அரசுக்கு அழகாக இருக்காது.

எனவே மாணவர்களின் உற்சாகத்தை தடுக்காமல் புதிய ஆண்டில்,  புதிய வகுப்பில் அவர்கள் பிரகாசமாக ஜொலிப்பதற்கு வழி காட்ட வேண்டும்.

காலதாமதம் செய்யாமல் உடனடியாக பள்ளிகள் திறப்பதற்கு வழி காட்டுவது தான் உங்களுக்கு வாக்களிக்க சிபாரிசு செய்த இந்த குட்டீஸ்க்கு செய்யும் மிகப்பெரிய நன்றி கடன் என்று பெற்றோர்கள் வேண்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *