இளைய சக்திகளின் நம்பிக்கையாக,  புதிய சக்தியாக  பதவியேற்றிருக்கும் முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வணக்கம்.

தங்களது நல்லாட்சியில் கல்வித்துறையில் பின்வரும் மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.

அரசு மற்றும் அனைத்துத் தனியார் பள்ளிகளிலும்  நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் . பாடத்திட்டத்தில் ஒரு பிரிவாக அது சேர்க்கப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

குடும்ப உறவுகளின் மேன்மை , தேசப்பற்று கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த நிகழ்வுகள் மட்டுமே பள்ளிகள் கல்லூரிகளில் நடைபெற அனுமதிக்க வேண்டும்.

பள்ளி கல்லூரி விழாக்களில் பரிசுப் பொருட்கள் கோப்பைகளுக்குப் பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு , அறநெறிசார்ந்த நூல்களைப் பரிசாக வழங்கி  வாசிப்புத்தன்மையை வளர்க்க வேண்டும் .

16 வயது வரை மாணவர்கள் இன்ஸ்டா , முகநூல் , ரீல்ஸ் மற்றும் ஆபத்தான சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு  பார்ப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரி வளாகங்களுக்கு அருகில்  மது மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுடன் அதை விற்பவர்கள் , விநியோகிப்பவர்கள் அனைவரையும்  இரும்புக்  கொண்டு ஒடுக்க வேண்டும். கடுமையான தண்டனைகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும் .

ஆசிரியர் மாணவர் பெற்றோர் கூட்டம் தனியார் பள்ளிகள் உட்பட  எல்லா பள்ளிகளிலும் மாதம் ஒரு முறை கட்டாயம் நடத்தப்பட்டு மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் கண்காணிக்கப்பட வேண்டும்.

கல்லூரிகளில் மாணவர் சங்கங்கள்  அமைப்பதற்கும்  தேர்தல் நடத்துவதற்கும், பஸ் டே வெறியாட்டம் போன்றவற்றிற்குத் தடை விதிக்க வேண்டும்.

சாதி , மதம் , அரசியல் சார்புடைய பேரணிகள் , கொண்டாட்டங்கள் , போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும். மீறும் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

“மனிதனை உருவாக்கும் கல்வியே தேசத்தை மேம்படுத்தும் கல்வி” என்ற ஸ்வாமி விவேகானந்தரின் கனவை நனவாக்க வேண்டும் என்றால் .. மேற்கூறிய  நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே கல்வித் துறையில்  மேற்கொள்ள வேண்டுகிறோம்

இளைய சமுதாயத்தின்  நம்பிக்கை நாயகனாக விளங்கும் தாங்கள் .. தமிழகத்தில் தலை சிறந்த குடிமக்களை உருவாக்க மாற்றத்தை அடிவேரிலிருந்து தொடங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்
உதயம் ராம்
பொதுச் செயலாளர்
94440 11105

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *