
*தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 மாவட்ட அளவில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாதனை – கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பாராட்டு*
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர்.
*வெற்றி விவரம்:*
*மாற்றுத்திறனாளிகள் பிரிவு:*
எம். மௌனிகா, இரண்டாம் ஆண்டு தமிழ்த் துறை மாணவி – 100 மீ ஓட்டம் & குண்டு எறிதல் – முதலிடம்
எஸ். கிரி முருகன், எம்.ஏ முதலாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவர் – 100 மீ ஓட்டம் & குண்டு எறிதல் – முதலிடம்
டி.ஆர். தரணிஷ், மூன்றாம் ஆண்டு பி.பி.ஏ துறை மாணவர் – இறகுப்பந்து – மூன்றாம் இடம்
*மாணவிகள் பிரிவு:*
கபடி-முதலிடம்
பூப்பந்து-இரண்டாம் இடம்
கூடைப்பந்து-மூன்றாம் இடம்
M. ரூபினி, இரண்டாம் ஆண்டு ஃபேஷன் டெக்னாலஜி துறை மாணவி – கேரம் – முதலிடம்
எஸ். கவிப்பிரியா, III B.Sc வேதியியல் துறை மாணவி – நீச்சல் 200 மீ பேக் ஸ்ட்ரோக் – முதலிடம்.
எம். வசந்தி, மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி – தடகளம் 3000 மீ – இரண்டாம் இடம்
எஸ். சுமித்ரா, M.Sc முதலாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி – இறகுப்பந்து ஒற்றையர் இரண்டாம் இடம் &
இரட்டையர் பிரிவு இரண்டாம் இடம்
எஸ். வைஷ்ணவி, & முதலாம் ஆண்டு வணிகவியல் (C.A) துறை மாணவி &
எஸ் சுமித்ரா
இறகுப்பந்து இரட்டையர் இரண்டாம் இடம்
*மாணவர்கள் பிரிவு:*
கைப்பந்து (Handball)-முதலிடம்
வாலிபால்-இரண்டாம் இடம்
கபடி-இரண்டாம் இடம்
கால்பந்து-மூன்றாம் இடம்
எஸ். தீபக் விக்னேஷ், மூன்றாம் ஆண்டு தாவரவியல் துறை மாணவர் – இறகுப்பந்து ஒற்றையர் இரண்டாம் இடம் & இரட்டையர் முதலிடம்
சி. மாதேஸ்வரன், மூன்றாம் ஆண்டு வணிகவியல் (C.A) துறை மாணவர் – இறகுப்பந்து இரட்டையர் முதலிடம்
எம். விஜயராகவன், மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவர் – சதுரங்கம் – இரண்டாம் இடம்
எஸ். நாசர், II M.Sc விலங்கியல் துறை மாணவர் – நீச்சல் 100 மீ & 1500 மீ ஃப்ரீ ஸ்டைல் – முதலிடம்
ஆர். நாகேந்திரன், மூன்றாம் ஆண்டு கூட்டுறவுத் துறை மாணவர் – நீச்சல் 200 மீ பிரஸ்ட் இரண்டாம் இடம் & 100 மீ பிரஸ்ட் மூன்றாம் இடம்
கே. பிரசாத், இரண்டாம் ஆண்டு கூட்டுறவுத் துறை மாணவர் – நீச்சல் 50 மீ ஃப்ரீ ஸ்டைல் – மூன்றாம் இடம்
சிலம்பம்
கே. சபரி, மூன்றாம் ஆண்டு B.B.A துறை மாணவர் – சிலம்பம் 55-65 கிலோ – முதலிடம்
*அரசு ஊழியர்கள் பிரிவு:*
திரு. பெ. மாதேஷ், உதவியாளர் – குண்டு எறிதல் – முதலிடம்
திருமதி ரேணுகா பரமேஸ்வரி, இயற்பியல் துறை- கேரம் – முதலிடம்
*பாராட்டு விழா:*
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் *முனைவர் கோ. கண்ணன்* அவர்கள் பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற *டாக்டர் எம். பாலசுப்பிரமணியம்* இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் பொறுப்பு *சி. லவிஷா* ஆகியோரும் கலந்து கொண்டு, விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்கள்.
விளையாட்டுத் துறையில் மாணாக்கர்கள் சாதனை படைக்க உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்
முனைவர் கு. *பாலமுருகன்* அவர்களையும், சாதனை படைத்த மாணாக்கர்களையும் கல்லூரி முதல்வர் *முனைவர் கோ. கண்ணன்,* என்.சி.சி அலுவலர் முனைவர் ஏ. தீர்த்தகிரி, அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

