
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் முதுகெலும்பாக எனது நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள மாநில ,மாவட்ட தலைவருக்கு என் இனிய காலை வணக்கம்….
நமது சங்கத்தின் வழிகாட்டியாய் மிகச் சிறந்த செயல் வீரராய் தாங்கள் தொடர்ந்து எனக்கு எல்லா வகையிலும் உங்களால் இயன்ற மட்டும் உதவுவீர்கள் என்று நம்புகிறேன்…
நான் உங்களிடம் பணம் காசு எதிர்பார்க்கவில்லை…
உண்மையான அன்பையும் ஆதரவையும் வழிகாட்டலையும் அரவணைப்பையும் வேண்டுகிறேன்…
நாம் வாழும் காலத்திலே
நமது கல்விப் பணி சிறக்க…. நமது சங்கத்தை தமிழகத்தின் தலைசிறந்த சங்கமகா…. முதன்மை சங்கமாக ….
மாற்றிட வேண்டும் என்று விரும்புகிறேன்…
கடந்த கால அனுபவங்களை ஒரு படிப்பினையாக ஏற்றுக் கொண்டு நிகழ்காலத்தில் எந்த தவறும் எக்காலத்திலும் நடைபெறாமல் நாம் யாரும் எந்த சூழ்நிலையிலும் பள்ளி நிர்வாகிகளை ஏமாற்றாமல் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் ஏஜென்ட்டூகளாக இல்லாமல் நமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் உன்னதமானவர்களாக… உயர்வானவர்களாக …நமது கல்வி மற்றும் சங்க பணியை செய்திட வேண்டும் என்று விரும்புகிறேன்..
அதற்கு நீங்கள் எனக்கு….. நமது சங்கத்திற்கு வழிகாட்டியாய்… ஒளி விளக்காய்…. கலங்கரை விளக்காய் ….
நாளை நம் சங்கத்தை வழிநடத்தும் மிகச்சிறந்த தலைவராக
நீங்கள் வரவேண்டும் என்று விரும்புகிறேன்..
அதற்காக நீங்கள் எவ்வளவோ பணிகளுக்கு இடையில் வாரத்தில் ஒரு மணி நேரமாவது நமது சங்கத்தின் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்…
உங்கள் பகுதியில் உள்ள பள்ளி நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சென்று பார்த்து பேசி ஒருங்கிணைக்க வேண்டும்… நமது சங்க நிகழ்வுகளை நடத்திட வேண்டும். சங்க நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
நமது நட்பு வட்டம் மேம்பட…..
தமிழகத்தில் தலைசிறந்த தரமான கல்வியை
அனைவருக்கும் கிடைக்க செய்திட…..
அரசுக்கும் பள்ளிகளுக்கும் பாலமாக இருந்து
தனியார் பள்ளிகளின் உரிமைகளை மீட்டெடுத்து
பயிற்றுப் பல கல்வி தந்து தமிழ்நாட்டை நம்
பாரத தேசத்தை உயர்த்திட வேண்டும்…
நீங்கள் யார் எந்த கட்சியில் இருந்தாலும்.. அது அவரவர் சொந்த விருப்பம் நாம் அதில் தலையிடுவதில்லை…
நாம் அனைவரும் சாதி ,மத ,இன, மொழி, கட்சி
பேதம் மறந்து கல்வியாளர் இனம் என்கிற நோக்கத்தோடு .,…
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலம்…
பெற்றோர்களின் கனவுகளை மேம்படுத்த ….
நம் ஆசிரியர் பெருமக்களின் அறிவை வளப்படுத்தி… நம்மை நாம் பலப்படுத்தி…
நமது உரிமைகளை மீட்டெடுத்து எல்லோரும் ஏற்றம் பெற என்னாலும் உழைத்திட நீங்கள் எனக்கு ….
இனி நமது சங்கத்தை இன்னும் சிறப்பாக நடத்திட நல்வழி காட்டிட வேண்டும் என்று வேண்டுகிறேன்..
அதற்காக இந்த செய்தியை படித்து விட்டு போகாமல்
உங்கள் எண்ணங்களை லட்சியங்களை கனவுகளை நிறைவேற்ற நமது சங்கத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி…..
நமது கோரிக்கைகளை வென்றெடுக்க
நாம் அனைவரும் பெரிய பள்ளிகள், சிறிய பள்ளிகள் என்ற பேதம் இல்லாமல் ஒற்றுமையோடு எல்லோருடனும் இணைந்து செயல்படுவோம்…
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளை…. ஒரே கொடையின் கீழ் கொண்டு வருவோம்…
அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் திட்டமிடுங்கள்.. செயல்படுங்கள்.. வழிகாட்டுங்கள்..
நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க இன்றே. …
உங்கள் கருத்துக்களை சுருக்கமாக நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி இயங்க வேண்டும்…
உங்கள் மாவட்டத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்கிற உங்கள் கருத்துக்களை ஒவ்வொருவரும் தவறாமல் இந்த வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்யுங்கள்…
இனி….. பள்ளி நிர்வாகிகளுக்கு வசந்தகாலமாகிட..
கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தை நினைவில் வைத்து வருங்காலத்தை வளமாக்க ஏலகிரி மலைக்கு வாருங்கள் தோழர்களே என்று உங்களை… உங்கள் கருத்துக்களை வணங்கி வரவேற்கிறேன்…
வாழ்த்துக்களுடன்.
K .R. நந்தகுமார் . மாநில பொதுச் செயலாளர்
