திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் இராஜகோபுரத்தை மறைக்கும் வண்ணம் பல கோடிக் கணக்கான பக்தர்களின் வயிற்றெரிச்சலை வாரிக் கட்டிக் கொண்ட முந்தைய ஆட்சியின் கேடுகெட்ட அறநிலையத்துறை ஆலயத்தை மறைக்கும் வண்ணம் வணிக ரீதியிலான பல அடுக்கு பல்நோக்கு வணிக வளாகம் கட்ட அதற்கென்றே பிரத்தியேகமாக 2023ம் ஆண்டு ஒரு அரசாணைப் பிறப்பிக்கப்பட்டு சில கோடிகளையும் ஒதுக்கி கட்டுமானம் துவங்கியது

பதை பதைக்கும்படி  பக்தர்களை வதைக்கும்படி ஆலயத்தை இராஜ கோபுரத்தை மறைத்து கட்டுமானப் பணியை துவக்கிய நிலையில்  அண்ணாமலை பக்தரால் நீதிமன்றத்தில் தடையாணைப் பெறப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று புதிதாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் தமிழக அரசால் அந்த அரசாணை வாபஸ் பெறப்பட்டது

இதற்காக தமிழக அரசை கோடிக்கணக்கான அண்ணாமலை பக்தர்களும் உள்ளூர் மக்களும் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார்கள்…

கவிஞர் உமா சங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *