பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு….

கடந்த கால ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற பல்வேறு மனிதாபிமானமற்ற….. சட்டவிரோத நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின….

குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம்,
CBSE NOC, பள்ளியின் பெயர் மாற்றம், பள்ளி இடமாற்றம், தேர்வு மையங்கள் வழங்கிட…. என எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் லஞ்ச பணம் வாங்கிக் கொண்டும்….. வேலை செய்யாமல் இழுத்து அடித்தார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை….

பல்லாயிரக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரமே இல்லாமல்
மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்…

இந்த நிலையில் அன்றைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தனியார் பள்ளிகள் இயக்குனர், அமைச்சரின் பி. ஏ.,
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் BVM. முத்துக்குமார்.
B.T. அரசகுமாருடன் இணைந்து அனைத்து சங்கங்களும் ஒன்றாக இருந்தால் தனியார் பள்ளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்.

சங்கங்கள் தனித்தனியாக கோரிக்கைகளை வைத்து போராட்டங்கள் செய்தும், நீதிமன்ற வழக்குகள் தொடுத்தும், அரசுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம் உடனடியாக உங்கள் பள்ளிகளுக்குரிய நிரந்தர அங்கீகாரம்,
நர்சரி பிரைமரி பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை, நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், தனியார் பள்ளி கட்டிடங்களுக்கான DTCP/CMDA கட்டிட அனுமதி தரப்படும் என்று உறுதி தந்தார்கள்… அதை ஏற்று அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டோம்.

அதற்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்று பெயரிட்டு அமைச்சரே நேரில் வந்து துவக்கி வைத்து தந்த உத்தரவாதத்தின் பேரில் பள்ளி மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் முழுமையாக நம்பினோம்…

காலப்போக்கில் B.T.அரசகுமார், முத்துக்குமார் இணைந்து அனைத்து பள்ளிகளிடமும் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக மாநில முழுக்க DEO ..க்கல் துணையோடு கூட்டங்களை போட்டு லட்ச கணக்கில் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள்…

கலந்த கால ஆட்சியின் காலம் முடியும் தருவாயில் கூட வசூல் வேட்டையை வேகப்படுத்தினார்கள்…

கோரிக்கைகள் நிறைவேறிய பாடு இல்லை….

ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே எவ்வளவு பேர் பணம் கொடுத்தார்கள்? எதற்காக கொடுத்தார்கள்? எவ்வளவு கொடுத்தார்கள்? வசூலிக்கப்பட்ட அந்த பணத்தை யாருக்கு கொடுத்தீர்கள்? என்ற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது விருப்பம் இருந்தால் இருங்கல் இல்லையென்றால் வெளியே இல்லையென்றால் ஒவ்வொரு பள்ளி சங்க நிர்வாகிகளையும் அவமானப்படுத்தி நான்கு சங்க நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டார்கள்..

TVK ஆட்சி அமைந்த உடன் கடந்த கால நிகழ்வுகளை சொல்லி நிகழ்காலத்தில் ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாமல் CBSE NOC தருகிறேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக வந்து ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி பேசினார்.

நாமும் மற்ற சங்கங்களும் அதற்கு நன்றி தெரிவித்தோம்.

ஊடகவியலாளர்களின் தொடர் கேள்விகளால் கடந்த கால தவறுகள் வெளிவர ஆரம்பித்தன…

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு FAFSIT தலைவர் டி.சி. இளங்கோவன் அவர்கள் தமிழக காவல்துறை தலைவர் அவர்களிடம் 100 கோடி ரூபாய் வரை பள்ளி நிர்வாகிகளிடம் வசூலித்து எந்த ஆணையும் வழங்காமல் B.T. அரசு குமார் மற்றும் முத்துக்குமார்
ஆகியோர் பணம் பெற்று பள்ளி நிர்வாகிகளை ஏமாற்றி விட்டார்கள் என்று புகார் அளித்தார்…

அதன் விளைவாக இன்றைக்கு நூற்றுக்கணக்கான பள்ளி நிர்வாகிகள் சென்னை மாநகர ஆணையாளர் அவர்களின் ஆணைக்கிணங்க CCB SP.,ACP அவர்களின் தலைமையில் B.T. .அரசகுமார் கைது செய்யப்பட்டு அவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்…

இந்த நிலையில் பணத்தை இழந்து பரிதவிக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் தந்து, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுக்குரிய பரிகாரம் கிடைக்கும் இழந்த பணம் மீட்டுத் தரப்படும் என்று தமிழக காவல்துறை தமிழக அரசு எந்தவித பாரபட்சமும் பழிவாங்கல் நடவடிக்கையும் இல்லாமல் வெளிப்படை தன்மையோடு மிகச் சிறப்பாக விசாரணை செய்து வருகிறார்கள்..

இந்நிலையில் பணத்தை இழந்து பரிதவிக்கும் பள்ளி நிர்வாகிகள் தயவு செய்து உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உடனே அனுப்பி வையுங்கள்.. 

பணம் வாங்கியவர்கள் மீண்டும் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று பொய் சொல்வார்கள். புகார் தர வேண்டாம் என்று வேண்டுவார்கள்…

நேரில் வர முடியாதவர்கள்  புகாரை தமிழக காவல் துறை ஆணையாளர் அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்… …

புகார் செய்பவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும்.
புகார் கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் பணம் திரும்ப கிடைக்கும்..

நல்லவேளை ஆட்சி மாறி காட்சிகள் மாறி புதிய கல்வி அமைச்சரிடம் தமிழகம் முழுக்க உள்ள பல்வேறு பள்ளி நிர்வாகிகள் கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டி அனைவருக்கும் உடனடி தொடர் அங்கீகாரம் கிடைத்திட வேண்டும் என்கிற வேண்டுகோள் வைக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்திற்கு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

கடந்த வாரம் கூட இரண்டாவது முறையாக தலைமைச் செயலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளி நிர்வாகிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கி உள்ளார்…

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளரிடம் நான் பேசியதற்காக 20 நாள் கழித்து முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய கைத்தடிகளை வைத்து எனது பள்ளிக்கு எதிரான பொய்யான செய்திகளை ஒளி பரப்பினார்கள்…

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எனது பேட்டி குறித்து 20 நாட்கள் கழித்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 50 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்…

நான் சொன்னதெல்லாம் உண்மை அவர்கள் லஞ்சம் வாங்கியது உண்மை. அதுவும் கடந்த மூன்று ஆண்டுகள்
டி. நகரிலும்,
கடைசி இரண்டு ஆண்டுகள் தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம் மேலே இரண்டாவது மாடியில் தனி அலுவலகம் வைத்து லஞ்சப் பணம் இலட்சக்கணக்கில் வசூலித்தார்கள் என்கிற குற்றச்சாட்டையும் உறுதி செய்தும் பதில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்..

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து அனைவரும் பணியாற்றி தமிழகத்தை தலைசிறந்த கல்வி சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு பள்ளி நிர்வாகிகள் அனைவரும் அச்சமின்றி  ஒத்துழைக்க வேண்டும்…

இனி யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம்… லஞ்சம் தர வேண்டாம்.

பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் உடனடியாக கீழ்க்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்…

நிச்சயம் உங்கள் பணமும் உங்கள் பள்ளி
களுக்கு
ரிய  அங்கீகாரம் கிடைப்பதற்கான அனைத்து வழியும் ஒரு பைசா செலவில்லாமல் இந்த நல்லாட்சியில் கிடைக்கும்…

நாம் நம்மையும் நம் சொத்துக்களையும் பாதுகாத்து தரமான கல்வியை அனைவருக்கும் கிடைத்திட செய்வோம்…

தனியார் பள்ளிகளின் நலம் நாடும்….
வழக்கறிஞர்
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.
18.08.2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *