
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் முன்வைத்த குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், முந்தைய திமுக ஆட்சியின் போது கல்வி நிறுவனங்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
“கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் கட்டாயப்படுத்திதான் பணம் வசூலித்தார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனது பள்ளிக்கு அங்கீகாரம் பெறுவதற்கே லஞ்சம் கேட்கப்பட்டது; அதற்கு நானே சாட்சி!
சென்னை தி.நகரில் யாரிடம், எங்கு வைத்து பணம் கொடுக்கப்பட்டது என்பதை என்னால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். இந்த விவகாரத்தில் என் மீது என்ன வழக்கு தொடரப்பட்டாலும், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நான் தயார்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
அமைச்சர் மரியா வில்சனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மற்றும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். பதவியில் இருக்கும் ஓர் அமைச்சர், தான் லஞ்சம் கொடுத்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொள்வது சட்டப்படி தவறு என்றும் அவர் சாடினார்.

இது தொடர்பாகப் பேசிய அன்பில் மகேஷ், “பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் தான் லஞ்சம் கொடுத்ததாகக் கூறுவது அடிப்படை விதிகளுக்கே எதிரானது.
இரண்டு மாதங்களுக்கு முன்புகூட என் மீது இதே போன்ற அவதூறு பரப்பப்பட்டது; அதற்காக ₹50 கோடி நஷ்டஈடு கேட்டு நான் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்.
அந்த நபர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தப் பின்னணியில் இருந்து கொண்டு அமைச்சர் இப்படிப் பேசுகிறாரா என்று தெரியவில்லை.
லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அமைச்சரிடம் முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் முறைப்படி புகார் அளிக்க உள்ளோம். எப்போதும் அன்பையும் பாசத்தையும் மட்டுமே பேசுவதாகக் கூறும் அமைச்சர் மரியா வில்சன், தற்போது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகிறார். இது முழுக்க முழுக்க அரசியல் திசைதிருப்பல் நாடகம்” என்று தெரிவித்தார்.
அன்பில் மகேஷின் இந்த பேச்சுக்கு பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக என்றாலே திருடர்கள் கூட்டம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
எதை வைத்து இவர் மரிய வில்சன் மீது புகார் அளிக்கப் போகிறார்? அப்படி புகார் கொடுத்தால் யார் வாங்கினார்கள் எதற்கு வாங்கினார்கள் என்ற கேள்வி வரும் அதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
பள்ளிக்கல்வித்துறையில் நடந்த மிகப்பெரிய இந்த ஊழலுக்கு இவர்தான் முக்கிய காரணம் என்று இவரின் கூட்டாளி B.T. குமார் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவர் எப்போது கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் தானாக போய் எல்லாம் மாட்டிக்கொள்ள மாட்டார்.
இவர் கொடுத்துள்ள பேட்டி என்பது சும்மா பம்மாத்து காட்ட தான் என்கிறார்கள்.
