
என் மரியாதைக்கும் பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் உரிய நமது சங்கத்தின் ஆணிவேர் நீங்கள் தான்… உங்களுக்கு என் இனிய காலை வணக்கம்…
நமது தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கம் 1998 இல் தொடங்கி இன்று வரை எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற வழக்குகள், கருத்தரங்குகள், கோரிக்கை மாநாடுகள் …விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சிகள்… பள்ளி வேலை நிறுத்தங்களை
கடந்த காலங்களில் நமது சங்கம் நடத்திய போது என்னோடு இருந்து நமது சங்க நடவடிக்கைகளில் ஆக்கமும், ஊக்கமும் தந்து நமது சங்கம்
உயிர்ப்போடு அன்றும், இன்றும், என்றும் பள்ளி நிர்வாகிகளின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இயக்கமாய்
இயக்கிவைத்த என்னை ..,.. எனக்கு நல்வழி காட்டி, நம்பிக்கை ஊட்டி
இயக்கிவைத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..
அப்படிப்பட்ட நமது சங்கம்…. என்னோடு போய் விடக்கூடாது. எனக்கு பின்னால் நீங்கள் எல்லாம் தலைமை தாங்கி வழிநடத்திட வேண்டும் என்கிற பேராவாவின் காரணமாக …..
இந்த மனம் திறந்த மடலை தங்களுக்கு
எழுதியுள்ளேன்…
இனிவரும் காலங்களிலும் உங்கள் தலைமையில் இன்னும் சிறப்பாக நமது சங்கம் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்…
அதற்காக உங்கள் மேலான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வேண்டியும்…
நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் ?. நமது சங்கத்தை இன்னும் சிறப்பாக எப்படி நடத்திட வேண்டும் ?… தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் நம் சங்கத்தில் எவ்வாறு ஒருங்கிணைப்பது… நமது எதிர்கால திட்டம்.. செயல்பாடுகள்… குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் நாம் முக்கிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டும் *திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஏ.ஜி.எஸ். ரிசார்ட்ஸ்*
இல் ஒன்று கூடி…
அடுத்த நாம் என்ன செய்யலாம்…
என்கிற திட்டமிடல் நிகழ்ச்சி நடத்திட முடிவு செய்துள்ளோம்.
அதற்குள்ளாக நீங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள நமது சங்கத்தின் மீதும் நம்மீதும் நம்பிக்கைக்கு உரிய பள்ளி நிர்வாகிகள் பட்டியல் குறைந்தது 20 பள்ளி நிர்வாகிகளின் பெயர்களை தயாரித்து அவர்களுக்குரிய கைப்பேசி எண், இமெயில் ஐடி ஆகியவற்றை சேகரித்து எனக்கு அனுப்பிட வேண்டும்…
அதை வைத்துக்கொண்டு நாம் நம் சங்கத்தின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பாக செய்வதற்கு வேண்டிய பணிகளை தொடங்குவோம்.
கடந்த கால செயல்பாடுகளை ஒரு பாடமாகக் கொண்டு… நிகழ்காலம் நமக்கானதாக
நாம் மாற்றிக் கொண்டாக வேண்டும்.
அதற்காக நாம் ஒவ்வொருவரும்
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். நம்மை நம்பி இருக்கக்கூடிய
நம் பள்ளி நிர்வாகிகளை காப்பாற்றி கரை ஏற்றிட வேண்டும்.
அதற்காக நான் உங்களை மட்டுமே நம்பி உள்ளேன்.
நம்மிடம் இருந்து நம்மால் அனுப்பப்பட்டவர்களே கால சூழ்நிலை காரணமாக மாற்று இடத்தில் பேச முடியாத மௌனிகளாக அமர்ந்துள்ளார்கள்…
விரைவில் அவர்களும் வருவார்கள்…
நமது சங்கத்தின் செயல்பாடுகள், லட்சியங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் யாவும் தனியார் பள்ளிகளின் நலம் மட்டுமே…. தனியார் பள்ளிகளை பாதுகாப்பது, மேம்படுத்துவது மட்டுமே, கொள்கையாகக் கொண்டு…
அவரவர் சாதி, மதம், இனம், மொழி, கட்சி யாவும் அவரவர் தனிப்பட்ட உள் விவகாரங்களில் நாம் தலையிட வேண்டியது இல்லை… அது அவரவர் சுய விருப்பம்.
நாம் அனைவரும் கல்வியாளர்களாய் ஒன்றுபட்டு சங்கமிப்போம். சரித்திரம் படைப்போம்…. நாளை நமதே நாடும் நமதே.
நாம் அனைவரும் மன
மாச்சரியங்கள்
மறந்து பெரிய பள்ளி.. சிறிய பள்ளி என்கிற பேதம் இல்லாமல்… உங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் என்கிற ஒரு ஆலமரத்தின் கீழ் கொண்டு வந்து அளப்பரிய சாதனைகள் புரிந்து அற்புதமான கல்வியை அனைவருக்கும் தருவதில் கவனம் செலுத்துவோம்…
அதற்கான பணிகளை இன்று திட்டமிடுங்கள்.. வழிகாட்டுங்கள்.. செயல்படுத்துவோம்…
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கீல் அனைவருக்கும் தாழ்வே…
தனி மரம் தோப்பாகாது…
ஒரு கை ஓசை பயன் தராது….
தங்கம் செய்யாததை நமது சங்கம் செய்யும்…
தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நமது புதிய கல்வி அமைச்சரை சந்திப்போம்…
அதை தொடர்ந்து நாம் ஏலகிரியில்
*AGS Resorts* இல்
சந்திப்போம்…
வாழ்த்துக்களுடன்… கே.ஆர். நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர்.
TNNPMHSS Association.
25.04.2026.
