அன்புமணி திருப்பத்தூரில் பரப்புரை செய்து வருகின்றார்.அந்த பரப்புரையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்து கடுமையாக பேசி விமர்சித்தார்.மேலும் 8000 கூப்பன் குறித்தும் கடுமையாக பேசினார் அன்புமணி

அன்புமணி குறித்து சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது பரப்புரையில் பேசினார். அவர் பற்றி பேசி என் தரத்தை நான் குறைத்துக்கொள்ளமாட்டேன், தந்தையை தவிக்கவிட்டவர் அன்புமணி என்றார் ஸ்டாலின். இதற்கு அன்புமணியும் பதிலடி கொடுத்தார். பிறகு இன்று திருப்பத்தூரில் அன்புமணி பரப்புரை செய்தபோது முதலமைச்சர் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து தாக்கி பேசினார். தொகுதி சீரமைப்பை முதலமைச்சர் எதிர்பார்த்து குறித்தும், 8000 கூப்பன் குறித்தும் அன்புமணி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

அவர் பேசியது, தொகுதி சீரமைப்பால் தென்னிந்தியாவை விட வட மாநிலங்களில் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என ஸ்டாலின் சொல்கின்றார். அவருக்கு கணக்கு தெரியவில்லை என நினைக்கின்றேன். தொகுதி சீரமைப்பால் தமிழகத்தில் 50 % தொகுதிகள் எப்படி அதிகரிக்கப்படுமோ அதுபோல வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் 50 % தொகுதிகள் அதிகரிக்கும். இதில் கூட குறைவு என்ன இருக்கு ? இதற்கு ஏன் குறை சொல்கின்றார்.

பிரதமர் மோடி ஏமாற்றுகிறார் என சொல்கின்றார் ஸ்டாலின். இதில் உண்மையே இல்லை. எல்லா மாநிலங்களிலும் தொகுதிகள் அதிகரிக்கப்டுகின்றன. இதனை எதிர்ப்பது சட்ட நகலை முதலமைச்சர் முக ஸ்டாலின் எரித்துள்ளார். சட்ட மசோதா நகலை எரித்தது தேசிய துரோகம் செயல் என்றார் அன்புமணி. மேலும் ஸ்டாலின் தனது பரப்புரையில் ஐந்தாண்டுகளில் திமுகஆட்சியில் பல நலத்திட்டங்களை செய்தேன் என கூறி வந்தார்.

ஆனால் மக்கள் அதனை நம்பவில்லை. இதே திருப்பத்தூர் தொகுதியில் 21 வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்தார். ஆனால் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. பிறகு ஐந்தாண்டு சாதனைகள் குறித்து ஸ்டாலின் பேசவில்லை. அதைவிட்டு எட்டாயிரம் ருபாய் கூப்பன் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார். இதையெல்லாம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுவும் டூப்ளிகேட் கூப்பன். அந்த கூப்பனை கொடுக்கவில்லை என சொல்லி ஒரு பெண் திருச்சியில் தற்கொலை செய்துகொண்டார்.

அந்த பெண் கூப்பனை கேட்டபோது திமுகவினர் கொடுக்கவில்லை. அந்த பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த கூப்பனை தர மறுத்துவிட்டனர். அதனால் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்த கூப்பனை தயவு செய்து நம்பாதீர்கள். 8000 கூப்பனை பெற நாம் 3000 லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால் நம் எடப்பாடி பழனிச்சாமி அனைவரின் வங்கி கணக்கிலும் 10000 செலுத்துவேன் என்றார். 8000 பெரிதா ? 10000 பெரிதா ? என பேசினார் அன்புமணி. இவ்வாறு திருப்பத்தூர் பரப்புரையில் முதலமைச்சர் முக ஸ்டாலினை கடுமையாக பேசி விமர்சனம் செய்திருக்கின்றார் அன்புமணி.

இந்நிலையில் ஒருபக்கம் அன்புமணி தனது பரப்புரையில் முதல்வரை கடுமையாக பேசி வரும் நிலையில் மறுபக்கம் அன்புமணியின் தந்தையும் ஜி.கே மணியும் அவரை கடுமையாக சாடி வருகின்றனர். குறிப்பாக ஜி.கே மணி அன்புமணியின் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அவர் தந்தையை பார்க்க வரவே இல்லை என கூறியிருக்கின்றார். இவ்வாறு அன்புமணி மற்றும் ராமதாஸ் சர்ச்சை ஒருபக்கம் போய்க்கொண்டு வருகின்றது.

இதற்கிடையில் ஒருபக்கம் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் சூப்பர்ஸ்டார், அதிலும் இல்லத்தரசி திட்டம் தான் ஹைலைட். இதன் காரணமாகவே நாம் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறப்போவது உறுதி என்கின்றனர் திமுகவினர். அதே சமயம் அன்புமணி 8000 கூப்பனை நம்பாதீங்க, அந்த கூப்பனில் ஊழல் நடந்து வருகின்றது என குற்றம்சாட்டி இருக்கின்றார். பல இடங்களில் டூப்ளிகேட் கூப்பன் தரப்படுவதாக அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுகவினர் பதிலடி தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனவே கூடிய விரைவில் இதுகுறித்து திமுகவினர் தங்களது பதிலடியை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு திமுக மற்றும் அதிமுக இதுபோன்ற அறிவிப்புகளை தங்களது வாக்குறுதிகளாக வழங்கி வரும் நிலையில் இலவசங்கள் வேண்டாம் என கூறி பரப்புரை செய்து வருகின்றார் சீமான்.

மறுபக்கம் இலவசங்களை மக்கள் ஏற்க வேண்டாம் என சொன்ன தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளில் சில இலவசங்களை இணைத்திருக்கிறார். இவ்வாறு இந்த நான்கு முனை போட்டி நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில் இதில் வெல்லப்போவது யார் ? மக்களின் நம்பகத்தன்மையை பெற்றிருக்கும் வாக்குறுதிகள் என்ன ? என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு மே 4 ஆம் தேதி பதில் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *