தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓசூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, தனது தீவிர பிரச்சாரத்திற்கு இடையே ஊடகங்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர், ஓசூர் வளர்ச்சிக்கான தனது எதிர்கால திட்டங்களை முன்வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ண ரெட்டி, கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் ஓசூர் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தும் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, அதிமுக ஆட்சியில் ₹110 கோடி மதிப்பீட்டில் 11 நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிய குழாய் இணைப்புகள் மூலம் ஓசூர் மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்க கொண்டு வரப்பட்ட திட்டம், தற்போது திமுக ஆட்சியில் முழுமையடையாமல் முடங்கி கிடப்பதாக அவர் தெரிவித்தார்.
ஏரி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ₹20 கோடி நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் பணிகள் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

பாதாள சாக்கடை திட்டம், ₹20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் ஆகியவற்றில் முறையே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் சாடினார்.

ஓசூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான தனி மாவட்ட அறிவிப்பு குறித்து பேசிய அவர், “தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர் மற்றும் சூளகிரி ஆகிய நான்கு வட்டங்களை இணைத்து,

**ஓசூரை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்** உருவாக்குவதே எனது முதல் கோரிக்கை மற்றும் இலக்காகும். தனி மாவட்டம் அமைந்தால் எஸ்பி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளும் தானாகவே வந்து சேரும்.”

தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளாக அவர் முன்வைத்தவை:

* **பெங்களூருக்கு இணையான ஸ்மார்ட் சிட்டி:** ஓசூரை பெங்களூரு நகருக்கு இணையாக உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது.

* **விவசாயிகள் நலன்:** லிப்ட் இரிகேஷன் (Lift Irrigation) முறை மூலம் அனைத்து ஏரிகளையும் நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது.
* **விமான நிலைய விரிவாக்க பாதிப்பு:** ஏர்போர்ட் மற்றும் நாலெட்ஜ் காரிடார் (Knowledge Corridor) திட்டங்களால் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது.

திமுகவினர் தங்களது சுயநலத்திற்காக மாநகராட்சியின் வருவாயை பெருக்காமல், தங்களின் சொந்த வருவாயை மட்டுமே பார்ப்பதாக கூறிய அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ஓசூரின் உண்மையான வளர்ச்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.

E. V. PALANIYAPPAN. HOSUR REPORTER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *