தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் 6 தனி தொகுதி மற்றும் 2 பொதுதொகுதி என 8 தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுகிறது.

தி.மு.க. கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகள் பெற்ற 3-வது பெரிய கட்சியாக உள்ளது. இதனிடையே தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர்கள் அறிவிப்பு என தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதில் தி.மு.க. அ.தி.மு.க. தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. கூட்டணி கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த இதற்காக மார்ச் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்சி வருகின்றன. இந்த தேர்தலில், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி, அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க என நான்கு முணை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், தே.மு.தி.க. 10, கம்யூனிஸ்ட் கட்சிகள் இரு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள், ம.தி.மு.க. 4 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள், கொ.ம.தே.க 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் தி,மு.க தங்கள் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

அந்த வகையில் நேற்று (மார்ச் 28) ம.தி.மு.க, தே.மு.தி.க, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் 6 தனி தொகுதி மற்றும் 2 பொதுதொகுதி என 8 தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுகிறது.

செய்யூர் தொகுதியில் சிந்தனைச்செல்வன், தின்டிவனம் வன்னியரசு, அரக்கோணம் எழில் கரோலின், திருப்போரூர் பன்னீர்தாஸ், கள்ளக்குறிச்சி மாலதி, பண்ரூட்டி அப்துல் ரஹ்மான், பெரியகுளம் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  தற்போது சிதம்பரம் தொகுதி எம்.பியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடைசியாக 2016ம் ஆண்டு வி.சி.க சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தோல்வியை சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *