
திமுக 164 தொகுதியில் நேரடியாக போட்டியிடுகின்றனர். அந்த 164 தொகுதிகளில் 18 தொகுதியில் திமுக பாஜகவுடன் நேரடியாக மோதுகின்றனர். திமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளாக கருதப்படும் 18 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றனர். பாஜகவிற்கு அதிமுகவினர் மொத்தம் 27 தொகுதிகளை ஒதுக்கியிருக்கின்றனர்.
இதில் 18 தொகுதிகளில் பாஜக திமுகவை நேரடியாக எதிர்கொள்கின்றனர்.ஆவடி, மைலாப்பூர், திருவண்ணாமலை, ராசிபுரம், கோவை வடக்கு, அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை, சாத்தூர், ராமநாதபுரம், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் , ராதாபுரம், நாகர்கோவில் என 18 தொகுதிகளில் பாஜக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகின்றது.
இந்த 18 தொகுதிகளிலும் திமுக வலுவான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதனை பாஜகஎதிர்கொள்ளப்போவது எப்படி? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் அதிமுக மற்றும் பாஜக இடையே சில தொகுதிகள் பரிமாற்றப்படலாம் என சொல்லப்படுகின்றது.
அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் போய்க்கொண்டு இருக்கின்றதாம்.ஏற்கனவே திமுக வலுவாக இருக்கக்கூடிய தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கியிருப்பதாக சிலர் சொல்கின்றனர். இதனைத்தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே சில தொகுதிகள் பரிமாறப்படலாம் என தெரிகின்றது. இதிலிருந்து ஒரு மூன்று தொகுதிகள் வரை அதிமுக மற்றும் பாஜக இடையே மாற்றிக்கொள்ளப்படும் என தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் ஆவடி தொகுதியில் திமுகவின் நாசருக்கு எதிராக பாஜக வேட்பாளர் களமிறங்குவார். அதைப்போல மைலாப்பூர் தொகுதியில் த.வேலுவை எதிர்த்து பாஜகவின் தமிழிசைபோட்டியிடலாம் என தெரிகின்றது. அவிநாசியில் பாஜகவின் எல்.முருகன் போட்டியிடலாம் என கருதப்படுகின்றது. மறுபக்கம் அவிநாசியில் திமுக சார்பாக இளம் வேட்பாளர் களமிறங்குகிறார்.கோகிலமணி என்ற 26 வயது இளம் வேட்பாளர் திமுக சார்பாக களமிறங்குகிறார் .
சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். அந்த தொகுதியிலும் திமுக தான் களமிறங்குகின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அதிமுகவை நேரடியாக 18 தொகுதிகளில் எதிர்கொள்கின்றனர். எப்படி திமுக மற்றும் பாஜக 18 தொகுதிகளில் மோதுகின்றார்களோ ? அதைப்போல காங்கிரஸ் மற்றும் அதிமுகவும் 18 தொகுதிகளில் மோத இருக்கின்றனர். மறுபக்கம் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் 120 தொகுதிகளுக்கு மேல் பலப்பரீட்சை செய்கின்றனர்.
