அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலில் மிக வேகமாக காய் நகர்த்தி வருகிறார். நாம் தமிழர் சீமானுக்கு அடுத்த படியாக முதல் ஆளாக வேட்பாளர்கள் லிஸ்டை முதல் கட்டமாக அறிவித்தார், கூட்டணி கட்சிகளுக்கான இடங்களையும் ஒதுக்கினார், அந்த கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அதேபோல் பொதுவாக எடப்பாடி பழனிச்சாமி திமுக வாக்குறுதிகளை அறிவித்த பின்பே அறிவிப்பார்.. ஆனால் இந்த முறை ஸ்டாலினுக்கு முன்பாக எடப்பாடி வாக்குறுதிகளை அறிவித்து தேர்தல் பணிகளையும் தொடங்கிவிட்டார். முன்பெல்லாம் ஜெயலலிதா இதேபோல் முதல் ஆளாக பணிகளை முடித்துவிட்டு தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுவார். அதே ஸ்டைலை எடப்பாடி பயன்படுத்தி உள்ளார்.

தமிழகத்தில் முதல் கட்சியாக முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிட்டும், முதல் கட்டமாக 23 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித் தும், நேற்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை சென்னையிலிருந்து தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் களத்துக்கு புறப்பட்ட முதல் கட்சியாக எடப்பாடி கிளம்பி விட்டார் என்கிற கருத்துக்கள் பரவலாக வெளிப்படும் நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையில், பல்வேறு அம்சங்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்தாலும், முக்கியமாக 3 விசயங்கள் திமுக மற்றும் தவெக இரு கட்சிகளுக்கு ஒரு சேர செக் வைப்பதாக அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, ”திமுகவின் தேர்தல் அறிக்கை தான் தேர்தல் களத்தில் கதாநாயகன் ஒளிரும் என நெரேட்டிவ் செட் செய்யப்படும். ஆனா, இந்த முறை நிஜமாகவே அதிமுகவின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன், கதாநாயகி, இயக்குநர் என அனைத்து விசயங்களிலும் முன்னிலையில் இருக்கப் போகிறது. தேர்தல் களப் பிரச்சாரம் சூடு பிடிக்கும் போது இது தெரிய வரும். பாஜக அதிமுக கூட்டணி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததினால் சிறுபான்மையினரான கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது. அவர்களின் ஒட்டு மொத்த வாக்குகளும் திமுகவுக்குத்தான் போகும். திமுகவின் வலிமையில் ஒன்று சிறுபான்மையினரின் ஆதரவு என்று பொதுத்தளத்தில் பரவலாக கருத்துக்கள் பதிவாகி வந்தன. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக செய்தது போல வேறு எந்த கட்சியும் செய்யவில்லை என்றும் திமுக ஆதரவு சக்திகள் பிரச்சாரம் செய்தன. இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் அவருக்குப் போகிறது என்று பேசப்பட்டது. குறிப்பாக, கிறிஸ்தவர்களின் 80 சதவீத ஆதரவு விஜய்க்குத்தான் போகும் என்றுகூட சர்வேக்கள் சொல்வதாக கட்டமைத்தனர். அப்போதுதான் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் இறுதி கட்டமாக விவாதித்தார் எடப்பாடி. திமுக மற்றும் தவெக கட்சிகள் பெரிதும் நம்புவது சிறுபான்மையினரின் ஆதரவு தான். இதனை உடைக்க வேண்டுமானால் அவர்களை ஈர்க்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் ஏதேனும் ஒன்று சொல்ல வேண்டும் என சொன்னார் எடப்பாடி. தேர்தல் அறிக்கைக் குழுவினரும் மண்டைய போட்டு உடைத்து கொண்ட நிலையில், சிறுபான்மையினரும் மாற்றுத்திறனாளிகளும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியிருக்கிறார்களா? என விசாரிக்குமாறு எடப்பாடி சொன் னார். கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி இதனையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் கோலோச்சிய முன்னாள் அதிமுக நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அதிமுக ஆட்சி யில் கூட்டுறவு வங்கிகளின் தலைவராக இருந்தவர் எடப்பாடியின் வலது கரமாக இருந்த சேலம் இளங்கோவன். அவரிடமும் விவாதித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவரும் தனது பழைய செல்வாக்கை வைத்து கூட்டுறவு வங்கிகளில் சிறுபான்மை யினர் வாங்கியுள்ள கடன் விபரங்களை சேகரித்துத் தந்துள்ளார். தமிழகம் முழுவதும் யோசிக்கவே முடியாத அளவுக்கு பெரிய எண்ணிக்கையில் சிறுபான்மையினர் கடன் வாங்கியிருப்பது தெரிந்தது. இவர்களின் கடன்களை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் சொன்னால், அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என்கிற மனநிலை சிறுபான்மையினருக்குள் வரும். அந்த மாற்றமே சிறுபான்மையினரின் திமுக மற்றும் தவெக ஆதரவு மனநிலையை உடைத்து விட முடியும். அவர்களின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்கும் என திட்டமிட்டு தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரின் கூட்டுறவு வங்கி கடன் ரத்து என்கிற அறிவிப்பை சேர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல தான் மாற்றுத்திறனாளிகளின் கடனும் ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பு. இதனையடுத்து மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது மாணவ-மாணவிகளின் கல்வி கடன் ரத்து அறிவிப்பு. கடந்த 2021 தனது தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தது திமுக. ஆனால், அதனை நிறைவேற்ற முடிய வில்லை. காரணம், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கல்விக்கடன் தள்ளுபடி திமுகவின் வேண்டுகோளை ஏற்று கல்வி கடனை ரத்து செய்ய மறுத்தது. அதாவது கல்வி கடன் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறோம்; அதனை ஒரே செட்டில் மெண்டில் தமிழக அரசு மொத்த தொகையையும் கொடுத்து விட்டால் நாங்கள் ரத்து செய்கிறோம் என வங்கிகள் தெரிவித்தன. ஆனால், மொத்த தொகையையும் கொடுக்க திமுக அரசால் முடியவில்லை. மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கை கையாண்டதால் மத்திய அரசும் திமுக அரசுக்கு உதவவில்லை. இதனால், கல்வி கடனை இப்போது வரை திமுகவால் ரத்து செய்ய முடியவில்லை. ஆனால், மத்திய பாஜக அரசுடன் அதிமுக கூட்டணி வைத்திரு ப்பதால் கல்வி கடனை ரத்து செய்ய மத்திய அரசு எங்களுக்கு உதவும். அதற்கான உத்தரவாதத்தை அமீத்சாவிடம் வாங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த நம்பிக்கையில்தான் கல்வி கடன் ரத்து என்பதை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக் கிறார். மத்திய பாஜக அரசுடன் நாங்கள் கூட்டணி வைத்திருப்பதால், கல்வி கடனை ரத்து செய்ய முடியும் என்பதை தனது தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி அழுத்தமாகச் சொல்வார். மாணவ-மாணவிகளின் ஆதரவு திமுக இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதனையும் இந்த முறை உடைத்திருக்கிறார் எடப்பாடி. அந்த வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் பல முக்கிய விசயங்கள் திமுகவுக்கு ஆப்பு வைப்பதாக இருக்கிறது” என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதிமுகவின் தேர்தல் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், அதனை உடைக்கும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை இருக்குமா? என்பதே இப்போது விவாதிக்கபடும் பொருளாக இருக்கிறது.
