தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் கொலை கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடு கஞ்சா அபின் மேத்தபட்டமின் போன்ற போதைப் பழக்கம் அதிகரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் தலைமைதான விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.,
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அசோக்குமார் தலைமை வகித்தார் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அதிமுக மாநில மகளிர் அணி இணை செயலாளர் பரிதாநவாப், ஊத்தங்கரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை, அதிமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைத்து கண்டன பேருரை ஆற்றினார்., அப்போது பேசியதில் கேபி முனுசாமி அவர்கள் திமுக அரசை மட்டுமல்ல திமுக குடும்பத்தையே வேரோடும் வேரடி மண்ணோடு தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.,இதனை தொடர்ந்து விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.,
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களான பாஜக இரு மாவட்ட தலைவர்கள் கவியரசு., நாராயணன். பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராம்., பழனிவேல்., கோவிந்தசாமி., அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கணேஷ் குமார்.,மாரிகவுடு., அறிவழகன்., தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் ஜெயபிரகாஷ்., செல்வராஜ, ரமேஷ் ரெட்டி.,கேவரெட்டி., புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் வினோத்.,மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவி ராஜேந்திரன், முனிவெங்கட்டப்பன்.,மனோரஞ்சிதம் நாகராஜ், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி.,நகர கழக செயலாளர் கேசவன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்
