தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தலோடு மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இருகட்டங்களாக ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் இன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப். 9ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும், மகாராஷ்டிரா, குஜராத்தில் ஏப். 23 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 4 ஆம் தேதி, 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையோடு, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *