• தளிதொகுதியில் பிஜேபி வேட்பாளர் அறிவித்த உடன் சிபிஐ வேட்பாளர் டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றுவிட்டார் என்று ஒய் பிரகாஷ் எம்எல்ஏ கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி. ராமச்சந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேன்கனிக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:

விவசாயிகள் இயற்கையோடு போராடி மற்றவர்களுக்கு வாழ்வளிப்பவர்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை என்பது ஒரு சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை மற்றும் ஒரு நாகரிக அரசின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழக முதல்வர் ஏற்கனவே குறிப்பிட்டது போல, விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்லும் மத்திய நிதியமைச்சரின் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

“உற்பத்தி அதிகரித்தால் அது நெருக்கடியை உருவாக்குமா? உற்பத்தி பெருகினால் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்கலாமே” என அவர் கேள்வி எழுப்பினார்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வரிச் சலுகையும், கடன் ரத்துகளும் செய்யும் அரசு, விவசாயிகளின் ஊக்கத்தொகையை மட்டும் நிறுத்தச் சொல்வது ஏன் என்றும் அவர் சாடினார்.

DMK மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் ஒய் பிரகாஷ் எம்எல்ஏ பேசும்போது இப்போது அறிவித்துள்ள பிஜேபி வேட்பாளர் நாகேஷ் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொகுதியில் வந்தவர் அதை பிறகு மக்களை சந்திக்காத வேட்பாளர். இந்தத் தேர்தலில் இவர் வேட்பாளராக அறிவித்த பின் உடனே மக்கள் டி இராமச்சந்திரன் அமோக வெற்றி பெறுவார் என்று அவர் கூறினார் காரணம் இப் பகுதியிலே மக்களை சந்தித்து மக்களுடைய குறைகளை கேட்காத வேட்பாளர் இப்போது திடீரென்று தளி தொகுதி மக்களை சந்தித்த வந்தால் மக்கள் அவர்கள் சரியான பாடம் புகட்டுவார் இந்த தேர்தலில் அவர் படும் தோல்வி அடைவார் டி இராமச்சந்திரன் தொகுதி மக்களுக்காக என்றும் பணியாற்றுகிறேன் வருகிறார் ஆகையால் இம்முறை சட்டமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த முக்கியமான தேர்தல் நேரத்தில், தேவையில்லாத திரைப்படப் பிரச்சினைகளைக் கிளப்பி மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

எத்தகைய நிகழ்வும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தளி தொகுதியில் தங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அவர் தனது பேட்டியின் இறுதியில் நம்பிக்கை தெரிவித்தார். உடன் மாநில பொறுப்பாளரும் மூத்தவரான எம் லகுமையா. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *