
“தமிழ்நாட்டில் இன்று எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்தக்கூடிய மோசமான சூழலை திமுக அரசு உருவாக்கி விட்டது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் சிவசங்கர் எதற்கும் பயனில்லாதவர். ‘மாப்பிள்ளை இவர்தான் ஆனால் சட்டை என்னுடையது’ என்ற காமெடி போல எஸ்.எஸ். சிவசங்கர் பெயரளவுக்குத்தான் மின்சாரத் துறை அமைச்சர். ஆனால் உண்மையான அமைச்சராக செந்தில் பாலாஜி தான் செயல்படுகிறார். கையெழுத்து போட மட்டும் தான் எஸ்.எஸ். சிவசங்கர் இருக்கிறார்.
தேர்தல் வந்துவிட்டது, பணம் மூட்டையை எடுத்துக் கொண்டு வருவார்கள். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். 6 கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்காளருக்கு ஆயிரம் ரூபாய் என்றால், கணக்கு போட்டுப் பாருங்கள் — திமுக எவ்வளவு கோடிகளை கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள் என்று.
திமுகவினர் ஒரு டூப்ளிகேட் கூப்பன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த கூப்பனை தூக்கி குப்பையில் போடுங்கள். பொதுமக்கள் ஏமாந்து விடாதீர்கள். தப்பி தவறி திமுக ஆட்சிக்கு வந்தாலும் அந்த 8000 ரூபாய் கூப்பனை திமுகவினருக்கு மட்டுமே கொடுப்பார்கள்; பொதுமக்களுக்கு கிடைக்காது. அதனால் தயவு செய்து இதுவரை ஏமாந்தது போதும் — இனிமேல் ஏமாந்து விடாதீர்கள்.
பாமகவிற்கும், விசிக-விற்கும் பிரச்சினை உருவாக்கியதே திமுக தான். வன்னியர்களும் பட்டியல் சமுதாய மக்களும் அடித்துக் கொள்ள வேண்டும்; அதன் மூலமாக திமுகவினர் பயன்பெற வேண்டும்.
