
சமூக மாற்றம் கல்வியில் மட்டுமல்ல…
அடுத்த தலைமுறைக்கான கல்வியை வழங்குவதிலும் இருக்க வேண்டும்!
நம்முடைய அம்மாக்கள் தலைமுறையை எடுத்துக்கொண்டால், குறிப்பாக 1960–70களில் பிறந்த பல பெண்கள் 8ஆம் வகுப்பிற்கு மேல் படிக்காத சூழல் இருந்தது.
அதற்குப் பிறகு, 1980களில் பிறந்த நம்முடைய சகோதரிகள் தலைமுறையில் Degree, Teacher Training என்று கல்வியின் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணம் தொடங்கியது.
இன்றோ…
நம் பெண்மக்கள் Engineering, IT, Medicine என்று கல்வி, தொழில் தேர்வுகளில் மாற்றத்தை நோக்கி…. .
ஆனால்…
அடுத்த தலைமுறை எங்கு செல்ல வேண்டும்?
இனி Defence, Security, Intelligence, Sports போன்ற துறைகளிலும் நம்முடைய குழந்தைகள் தயாராக வேண்டும்.
அதேபோல், கொஞ்சம் கொஞ்சமாக அரசுத் துறைகள், நிர்வாகம், அதிகாரப் பொறுப்புகள் போன்ற தளங்களிலும் நம்முடைய அடுத்த தலைமுறை நுழைய வேண்டிய காலம் இது.
அப்படியானால், இன்றைய குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டிய கல்வி எப்படி இருக்க வேண்டும்?
குழந்தைகளின் கல்வியை வெறும் உணர்ச்சிகளை (Emotions) அடிப்படையாகக் கொண்டு அமைப்பதைவிட, அவர்களின் உணர்வுகளுக்கும் (Feelings) தனித்தன்மைக்கும் மதிப்பளித்து கல்வியை வழங்க வேண்டும்.
கல்வி என்பது வெறும்…
புத்தகம், பாடம், தேர்வு மதிப்பெண்
என்ற வட்டத்திற்குள் மட்டும் இருக்கக் கூடாது.
கல்வி என்பது வாழ்வியல் கல்வி.
ஒரு மனிதனின் திறன்களை அடிப்படையாக மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பார்க்கலாம்:
1. Physical Skills – உடல் சார்ந்த திறன்கள்
உடல் இயக்கம், தன்னம்பிக்கை, தற்காப்பு, விளையாட்டு, உடல் கட்டுப்பாடு போன்ற திறன்கள்.
இந்தத் திறன்களில் சிறந்து விளங்கும் குழந்தைகள் இயல்பாகவே Sports, Defence, Army, Security, Martial Arts போன்ற துறைகளில் ஆர்வமும் திறனும் வெளிப்படுத்தக்கூடும்.
இவர்களுக்கு Survival Education மற்றும் உடல் சார்ந்த பயிற்சிகளுடன் Intellectual மற்றும் Psychological Skills-ஐ வளர்த்துக் கொடுத்தால், அவர்களின் திறன் இன்னும் பலமடங்கு விரிவடையும்.
2. Intellectual Skills – அறிவுசார் திறன்கள்
சிந்தனை, கற்றல், பகுத்தறிவு, பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், அறிவைப் பயன்படுத்துதல் போன்ற திறன்கள்.
இந்தத் திறன்களில் சிறந்து விளங்கும் குழந்தைகள் இயல்பாகவே Academic Education-ல் சிறப்பாக செயல்படும்.
அவர்களுடன் மற்ற இரண்டு திறன்களான Physical Skills + Psychological Skills ஆகியவற்றையும் இணைத்து கொடுத்தால், அவர்களின் ஆளுமை இன்னும் முழுமையானதாக மாறும்.
3. Psychological Skills – உளவியல் சார்ந்த திறன்கள்
தன்னம்பிக்கை, உணர்வுகளை நிர்வகித்தல், முடிவெடுத்தல், தலைமைத்துவம், மனிதர்களைப் புரிந்துகொள்ளுதல், அழுத்தமான சூழ்நிலைகளில் செயல்படுதல் போன்ற திறன்கள்.
இந்தத் திறன்கள் வலுவாக உள்ள குழந்தைகளுக்கு Leadership, Administration, Decision Making, Survival Skills போன்ற அறிவையும் அனுபவத்தையும் வழங்கினால், எதிர்காலத்தில் சிறந்த தலைமைப் பொறுப்புகளை ஏற்கக்கூடிய ஆளுமையை உருவாக்க முடியும்.
ஆனால் மிக முக்கியமான ஒன்று…
இந்த மூன்று திறன்களும் தனித்தனியானவை அல்ல.
Physical + Intellectual + Psychological
மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
ஒரு குழந்தையிடம் இந்த மூன்று திறன்களும் சமநிலையாக வளர்ந்தால், அந்தக் குழந்தை ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் அல்லாமல், பல்வேறு துறைகளில் தனது முழுத் திறனையும் பயன்படுத்தக்கூடிய பல்திறன் கொண்ட ஆளுமையாக வளர முடியும்.
ஒரு குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் Genetics மட்டும் காரணமல்ல.
குடும்பம், பெற்றோர், பள்ளி, ஆசிரியர்கள், நண்பர்கள், சுற்றுச்சூழல், அனுபவங்கள் மற்றும் குழந்தைக்கு வழங்கப்படும் திட்டமிட்ட கல்வி ஆகிய அனைத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதனால்…
ஒரு பள்ளியைத் தேர்வு செய்யும்போது,
“எந்தப் பள்ளியில் அதிக மதிப்பெண் வருகிறது?”
என்பதை மட்டும் பார்க்காமல்,
“இந்தப் பள்ளி என் குழந்தையின் Physical Skills,
“Intellectual Skills-ஐ வளர்க்கிறதா?”
சமூக மாற்றம் கல்வியில் மட்டுமல்ல…
அடுத்த தலைமுறைக்கான கல்வியை வழங்குவதிலும் இருக்க வேண்டும்!
மதிப்பெண் பெற்ற குழந்தையை உருவாக்குவது கல்வியின் ஒரு பகுதி மட்டுமே.
வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய மனிதனை உருவாக்குவதே முழுமையான கல்வி.
