விஜய் முதலமைச்சராக இன்னும் 6 எம்எல்ஏக்களின் தேவை இருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம் தவெகவின் பலம் 114 ஆக அதிகரித்திருக்கிறது.

சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ (CPI) அலுவலகத்திற்கு தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் வந்திருந்தார். அவரிடம் சிபிஐ 2 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை சிபிஐ வழங்கியுள்ளது. சிபிஐ தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிக்கு கடந்த தேர்தலில் 2 எம்எல்ஏக்களை வெற்றி பெற்றிருக்கிறது. ஏற்கெனவே தவெகவுக்கு 108+காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள் என மொத்தம் 113 எம்எல்ஏக்களை வைத்திருக்கிறது. இதில் விஜய் இரண்டு இடங்களில் ஜெயித்திருப்பதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே எண்ணிக்கை 112 என இருந்தது. தற்போது சிபிஐ ஆதரவு தெரிவித்திருப்பதால் மொத்த பலம் 114 என அதிகரித்திருக்கிறது.

அதேபோல இன்னும் சற்று நேரத்தில் சிபிஎம்(2) தனது நிலைப்பாட்டை அறிவிக்க இருக்கிறது. விசிகவும்(2) மாலை அறிவிப்பை வெளியிட இருக்கிறது. எல்லாம் சேர்த்தால் 118 இடங்கள் என்று வரும். இதன் மூலம் பெரும்பான்மை கிடைக்கும். எனவே விஜய் முதலமைச்சராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *