தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், இன்ன பிற ஊழியர்கள்… அனைவருக்கும் இனிய காலை வணக்கம்…
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ். இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில்… மிக முக்கியமான வேண்டுகோளை உங்கள் முன்னால் வைக்கின்றோம்..
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு தனியார் பள்ளிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏன் பெற்றோர்களுக்கு மாபெரும் துரோகம் செய்திருக்கிறது…
கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொடர் அங்கீகாரம் வழங்கவில்லை..
அவ்வாறு அங்கீகாரம் வழங்கினாலும்.. பல லட்சக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு பல்வேறு குற்றம்.. குறைகளைச் சொல்லி கோப்புகளை திருப்பி அனுப்பி பள்ளி நிர்வாகிகளுக்கு மாபெரும் மன உளைச்சலை உருவாக்கினார்கள்.
மாவட்ட கல்வி அலுவலங்களிலும் மற்ற துறை அலுவலகங்களிலும் …லஞ்சம் இல்லாமல் எந்த காரியமும் செய்யவில்லை…
இதுவரையில் தனியார் பள்ளிகளுக்காக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஒருமுறை கூட குறைகளை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் நடத்தவில்லை.. குறைகளை காது கொடுத்தும் கேட்கவில்லை.. தனியார் பள்ளிகளின் ஒரே ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றித் தரவில்லை…
கோடி கணக்கில் வசூல் மட்டும் செய்து கொண்டு இந்த நிமிடம் வரை பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டிய அங்கீகார புதுப்பித்தல் ஆணை கூட வழங்கவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஆர். டி. இ. கல்வி கட்டண நிலுவைத் தொகையை பெறுவதற்கு நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடித் தான் பெற வேண்டி உள்ளது…. LKG..UKG வகுப்புகளுக்கான கட்டணம் வெறும் 6000 ஆக குறைத்து விட்டார்கள்… உயர் நீதிமன்றத்தில் வழக்காடி அரசு…. கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை தர வேண்டும் அல்லது…. அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதை தர வேண்டும் என்கிற தீர்ப்பை மதிக்காமல்… அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு பழைய படியே ரூபாய் 6 ஆயிரம் மட்டும் வழங்குகிறார்கள்…
அங்கீகாரம் பெறுவதற்கான கட்டணங்களை மட்டும் உயர்த்தவில்லை புத்தக கட்டணம்… தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அதிகபட்ச
PTA உறுப்பினர் சேர்க்கை கட்டணம்..
உயர்த்தி PTA நடத்தும் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு பள்ளி நிர்வாகி இடமும் லட்சக்கணக்கில் நன்கொடை ..அரசு நடத்தும் புத்தக கண்காட்சி மற்றும் திமுக கூட்டங்களுக்கு பள்ளி வாகனங்களை இலவசமாக அனுப்பச் சொல்லி வற்புறுத்தி… நல்ல நிர்வாகங்களின் நிம்மதியை சீர்குலைத்தும்…
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிற்கதியாக்கி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்…
தனியார் பள்ளிகளுக்கு எதிரான தரமற்ற சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வந்து… தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழுவை அமைத்து …நம்மை நசுக்க பார்த்த … திமுக சர்க்கார்…
மெட்ரிக் பள்ளிகளில் 1200 மதிப்பெண்கள் என்பதை 500 மதிப்பெண்களாக தரும் குறைத்து…. நடைபெற்றுக் கொண்டிருந்த +1 பொதுத் தேர்வை ரத்து செய்து கல்வியின் தரத்தை சீரழித்து ..இந்தியா தேசம் முழுக்க உள்ள தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காமல்…. மாநில கல்விக் கொள்கை என்று அறிவித்து ஐந்து ஆண்டுகள் முடிந்து இன்னும் அதையும் அமல்படுத்த முடியாமல்….
மும் மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக… இருமொழி வழி கல்விக் கொள்கை என சொல்லி தமிழக மாணவர்கள் எதிர்காலத்தை சீரழித்து.. போலி கௌரவத்தை முன்னிலைப்படுத்திதமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரும் கல்வி நிதி வரவிடாமல் செய்து ….
உச்சநீதிமன்றம் சொல்லியும் ஆறு வாரங்களுக்குள் தமிழகத்தில் இடம் ஒதுக்கி தந்தால் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழக மாணவர்கள் அனைவரும் தரமான கல்வி கற்று உயர்வதற்கான வாய்ப்பை வழங்காமல் …. உயர்நீதிமன்ற… உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் … தமிழக பள்ளிக்கல்வித் துறையை பாழ்படுத்தி தரமற்ற சத்துணவு முட்டைகள் இலவசங்களை தந்து வருங்கால மாணவர்களின் வசந்த காலத்தை பாழாக்கி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் எழுத படிக்க தெரியவில்லை… போதுமான ஆசிரியர்கள் இல்லை… வகுப்பறைகள் இல்லை….
கழிப்பிட வசதி இல்லை..
கணினி வசதி இல்லை..
மின்சார வசதி இல்லை …
குடிநீர் வசதி இல்லை ….
ஆய்வக வசதி இல்லை ….
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.., பல்லாயிரக்கணக்கான அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை….
இப்படிப்பட்ட நிர்வாக சீர்கேடு நிறைந்த தமிழக பள்ளி கல்வித்துறை மீண்டும் உயிர் பெற வேண்டும் என்றால் நிச்சயம் ஆட்சி மாற்றம் தேவை…
இல்லை என்றால் பள்ளிக்கல்வித்துறையை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.. என்பதால் கல்வியாளர்கள் நாடு முழுக்க கூடி பேசி எடுத்த முடிவுகளின் படி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என்றும்… கலெக்ஷன்… கரெக்ஷன்…. கமிஷன்.. என தமிழகத்தில் ஐந்தாண்டு காலம் சட்ட விரோத திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாடு மிக மோசமான நிலைக்கு போவதை படித்த பன்பாளர்கள் ஆகிய
நாம் தான் தடுக்க வேண்டும்…
எனவே நாம் அனைவரும் இணைந்து மாற்றத்தை வேண்டி தேச ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம்…
கல்வியாளர்கள் நமக்கு அரசியல் வேண்டாம் என்று இனியும் ஒதுங்கிப் போனால் நம்மை ஒழித்து விடுவார்கள்..
எனவே நாம் நம்மையும்
நாம் செய்யும் தொழிலையும் சொத்துக்களையும் பாதுகாத்துக் கொண்டு தரமான கல்வியை தமிழகத்தில் வழங்கிட சாதி, மத, இன , மொழி.. பேதமற்ற NDA கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
கே. ஆர். நந்தகுமார்
மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம்.
