அதிமுக துணைப் பொதுச்செயலாளர் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சியினருடன் இனைந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அவர்கள் மீண்டும் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில்,

வேட்புமனு செய்ய இறுதிநாளான இன்று கே.பி.முனுசாமி அவர்கள் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு செய்தார்..

வேட்புமனு செய்வோர் ஊர்வலம், ஆட்டம் பாட்டத்துடன் வருவது வழக்கம் என்கிற நிலையில் கே.பி.முனுசாமி அவர்கள் எந்த ஆரவாரமின்றி கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார், பாஜக, பாமக நிர்வாகிகளுடன் இனைந்து வேட்புமனு செய்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *