
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், பெண்களையும் சாமானிய மக்களையும் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- விலைவாசி உயர்வை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை.
- பெண்கள் நலன் காக்க ‘குடும்ப விளக்கு திட்டம்’.
- மகளிரைப் போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம்.
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
- முதியோர் உள்ளிட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்வு.
- வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி.
- விவசாய உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- பொங்கல் பண்டிகையன்று, பொங்கல் பரிசுடன் ரூ.1,000 பண உதவி வழங்கப்படும்.
- கைதறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின்சாரம் சலுகை உயர்த்தப்படும்.
- நகரப் பகுதிகளில் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி.
- ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம்.
- தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு வேட்டி இலவசமாக வழங்கப்படும்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியுடன் பருப்பு, எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.
- பொதுமக்கள் மனுக்கள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
- அரசு நிலங்களில் நீண்டகாலம் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும்.
- நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக நிர்ணயம் செய்ய நடவடிக்கை.
- விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சோலார் பம்ப் செட்கள் வழங்கப்படும்.
- அத்திக்கடவு–அவிநாசி திட்டம் (Phase-2) செயல்படுத்தப்படும்.
- அனைத்து ஊராட்சிகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடஒதுக்கீடு 7.5% இலிருந்து 10% ஆக உயர்வு.
- பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரிவுபடுத்தப்படும்.
- அம்மா மினி கிளினிக்குகள் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீண்டும் தொடங்கப்படும
- அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேராத ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்ற பெரிய சிகிச்சைகளுக்கான முழுச் செலவையும் அரசு ஏற்கும்.
- 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் செவிலியர்களின் பணியை நிரந்தரப்படுத்தி, பணி வரன்முறை செய்யப்படும். காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு, வேலைப்பளு குறைக்கப்படும்.
- மருத்துவர்கள் மற்றும் பல்வேறு மருத்துவ பணியிடங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும்.
- உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு IVF (கருவுறுதல்) சிகிச்சை வாய்ப்பு வழங்கப்படும். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இலவசமாக இந்த சிகிச்சை வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் நவீன Fertility சிகிச்சை சேவைகள் விரிவுபடுத்தப்படும்.
- இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தும் நோக்கில், படிப்படியாக மதுபான கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகம் முழுவதும் நகரங்களில் CCTV கண்காணிப்பு வலுப்படுத்தப்படும். சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த, இரண்டாம் கட்ட நகரங்களிலும் உலகத் தரத்திலான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
