தமிழகத்தில் ஏப்ரல் 23 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. மேலும் அதிக அளவில் பணம் பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினரும் ஆங்காங்கே சோதனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் இதில், கோணப்பட்டி கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ரூ.1,00,000 /- பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஊத்தங்கரை அடுத்த கதவனி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர் இதில், சரத்குமார் என்பவர் ரூ.83,020 எடுத்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரப்பட்டு பகுதியில் வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆறுமுகம் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.83,000 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ஏழுமலை என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2,50,000 பணத்தை பறிமுதல் செய்துதேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், ஊத்தங்கரை தாசில்தார் ராஜலட்சுமி முன்னிலையில் ரூ.5,14,620 ரூபாய் பணத்தை ஊத்தங்கரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
G. R. Baskar. Krishnagiri Reporter
