நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாட்டில் 1952-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது, நடைபெற இருப்பது 17-வது சட்டசபை தேர்தல் ஆகும்.

ஆரம்ப காலத்தில், ஆட்சியில் இருந்தவர்கள், கடந்த 5 ஆண்டு காலத்தில் கொண்டுவந்த புதிய திட்டங்களை சாதனையாக கூறி வாக்குகேட்பார்கள். எதிர்க்கட்சியாக இருப்பவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுவெல்லாம் செய்வோம் என்று வாக்குறுதி அளிப்பார்கள்…

ஆனால், இந்த தேர்தல் கால நடைமுறைகள் காலப்போக்கில் மாறியது. ஆட்சியில் இருந்தவர்கள், செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்பதை… குறைத்துக்கொண்டு, கவர்ச்சிகரமான பொருட்களை இலவசமாக கொடுப்பதாக சொல்லி வாக்குகள் கேட்கத் தொடங்கினார்கள்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற முக்கிய காரணம், ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை அறிவித்ததுதான். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதை அதிகரிப்பதுடன், இலவச பொருட்களையும் வழங்குவதாக எதிர்கட்சியான அ.தி.மு.க. அறிவித்துள்ளது. வீட்டுக்கு வீடு பிரிட்ஜ் வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தொடர்ந்து, ஆளுங்கட்சியான தி.மு.க.வும் ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடதிட்டமிட்டுள்ளது. …

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், திருச்சியை தலைநகரமாக அறிவிக்கும் வாக்குறுதி வெளியாகும் என்று தெரிகிறது. மேலும், வீட்டுக்கு வீடு எல்.இ.டி. டிவி வழங்கும் அறிவிப்பும் முக்கியமாக இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை தொடர்ந்து, ஏப்ரல் 3-ந் தேதி திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தையும் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்க இருக்கிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *