தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் அந்த சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தான் தற்போது திமுக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டு மொத்தம் 5 சீட்டுகள் வழங்கப்பட்டன.
அதன்படி திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:
திருத்துறைப்பூண்டி – கா.மாரிமுத்து
தளி – டி ராமச்சந்திரன்
பவானிசாகர் – பிஎல் சுந்தரம்
திருப்பூர் வடக்கு – ரவி
ஸ்ரீவில்லிபுத்தூர் – மாகாலிங்கம்
