இந்திய கம்யூனிஸ்டு (சிபிஐ) இடையே நாளை தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்காக நாளை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு மு வீரபாண்டியன் வருகை தருகிறார். கடந்த முறை 6 தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு இந்த முறை 5 தொகுதிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திமுக கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தான் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

திமுக கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள தே.மு.தி.க. இரட்டை இலக்க தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களுக்கும் இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தொகுதி பங்கீடு நிறைவடையவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகமும் இடதுசாரிகள் எதிர்பார்க்கும் இடங்களை தருவது சிரமம் என்று கூறிவிட்டு காங்கிரஸ், தே.மு.தி.க.வுக்கு மட்டும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவதா? என்று கேள்வி எழுப்பி பேசியிருந்தார். இதற்கு இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் திமுக – இந்திய கம்யூனிஸ்டு இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெறவில்லை.

இந்த நிலையில் நாளை திமுக – இந்திய கம்யூனிஸ்டு இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும், இதில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்காக நாளை சென்னை அண்ணா அறிவாலத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தலைவர் மு வீரபாண்டியன் வருகை தருகிறார். இதில் திமுக இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை 6 தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி இந்த முறை 5 தொகுதிகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *