டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது.
முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வங்கதேச அணி, “இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என்று கூறி இலங்கையில் விளையாட அனுமதி கோரியது.
விலகிய வங்கதேச அணி
ஆனால் ஐசிசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்க டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது.
அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
புறக்கணித்த

பாகிஸ்தான்
இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தது.
“டி20 உலகக்கோப்பையில் இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என்று பாகிஸ்தானின் இந்தப் புறக்கணிப்பிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது.
