திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை தான் ஹீரோவும், ஹீரோயினும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதன்படியே படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவுகளை மெய்ப்பிக்கும் விதமாக அரசுத் துறைகளில் 1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் தாமதமின்றி நிரப்பப்படும் என ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இதனால் தேர்தல் காலங்களில் கட்சிகள் அளிக்கும் தேர்தல் அறிக்கைகள் கவனம் பெறும். எந்த கட்சிகள் எந்த அறிவிப்பினை வெளியிடுகிறார்கள் என்பதை வாக்காளர்களும் கவனத்தில் கொண்டு ஓட்டு செலுத்துவார்கள். இதனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் திமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு, திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோவும் ஹீரோயினும் என்று கூறியுள்ளார். வாக்காளர்களை கவரும் விதமாகவே பல்வேறு அறிவிப்புகளை திமுக வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை * குறிப்பாக பிரிட்ஜ், மிக்சி, டிவி, வாஷிங் மிஷின், மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வசதியாக, அல்லது பழைய பொருட்களை கொடுத்து புதிய பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் வருமான வரி கட்டாத அனைத்து குடும்ப இல்லத்தரசிகளுக்கும் ரூ.8 ஆயிரம் பரிசு கூப்பன் வழங்கப்படும். * மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
* ரூ.18 லட்சம் கோடியில் அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். * அரசு துறைகளில் காலியாக உள்ள 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் விரைந்து நிரப்பப்படும். * மீன்பிடி தடைக்காலத்தின் போது வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். இலவச லேப்டாப் * உயர் கல்வி படிக்கும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். * 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். * ஒவ்வொரு மாவட்டத்திலும் உள் விளையாட்டு அரங்கம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். * பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும். சென்னையில் செம்மொழி பூங்கா மாநாடு நடத்தப்படும். 50 புதிய செம்மொழி பூங்காக்கள் * நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1500 மாத உதவித் தொகையுடன் பயிற்சி * அனைத்து மாவட்டங்களிலும் நியோ டைட்டல் பூங்கா அமைக்கப்படும். * தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை * தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்ச கோடியாக உயர்த்தப்படும். * 1,000 கிராம கோவில்கள் மறுசீரமைக்கப்படும்.
சிறுபான்மையினருக்கான தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். * கிராம சாலைகள் ரூ.10,000 கோடியில் சீர் செய்யப்படும் * மாநகராட்சி, நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள். என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசுத் துறைகளில் 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியிருப்பது இளைஞர்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.
“நமது இல்லங்களில் அரசிகளான மகளிரை மகிழ்விக்க முக்கியமான வாக்குறுதி.. இல்லத்தரசிகள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களைப் புதிதாக வாங்க, ஏற்கனவே உள்ள ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களை மாற்ற இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் இல்லத்தரசிகள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதியில் அருகே இருக்கும் கடைகளில் இந்த பொருட்களை வாங்கி கொள்ள ரூ.8000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும்” என்றார். உரிமை தொகை 2. இப்போது உரிமை தொகை என்ற பெயரில் மாநிலம் முழுக்க ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த உரிமை உரிமை தொகையானது 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
