2026 தேர்தலை ஒட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு ஏற்பாடுகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. குறிப்பாக அதிமுக சார்பில் 23 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 127 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இந்நிலையில் இன்று (மார்ச் 29, 2026) 17 பேர் கொண்ட மூன்றாவது மற்றும் இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
| வ.எண் | தொகுதி பெயர் | வேட்பாளர் பெயர் |
| 1 | ஆயிரம் விளக்கு | பா.வளர்மதி, கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் |
| 2 | அண்ணா நகர் | எஸ்.கோகுல இந்திரா, கழக அமைப்பு செயலாளர், முன்னாள்அமைச்சர் |
| 3 | சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி | ஆதி ராஜாராம், கழகஅமைப்பு செயலாளர் |
| 4 | திட்டக்குடி (தனி) | என்.முருகுமாறன், கழக அமைப்பு செயலாளர் |
| 5 | துறைமுகம் | ராயபுரம் ஆர்.மனோ, கழக அமைப்பு செயலாளர் |
| 6 | விருகம்பாக்கம் | விருகை என்.ரவி |
| 7 | தியாகராய நகர் | பி.சத்தியநாராயணன் என்கிற தி.நகர் பி.சந்தியா, தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் |
| 8 | வேளச்சேரி | எம்.கே.அசோக், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் |
| 9 | சோழிங்கநல்லூர் | கே.பி.கந்தன், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் |
| 10 | டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் | ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் |
| 11 | வில்லிவாக்கம் | எஸ்.ஆர்.விஜயகுமார், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் |
| 12 | திருச்சுழி | எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கழக புரட்சி தலைவி பேரவை இணைச்செயலாளர் |
| 13 | ஆலந்தூர் | எஸ்.சரவணன், கழக புரட்சி தலைவர் பேரவை இணைச் செயலாளர் |
| 14 | கொளத்தூர் | பி.சந்தானகிருஷ்ணன், கழக புரட்சி தலைவி பேரவை துணைச்செயலாளர் |
| 15 | திரு.வி.க.நகர் (தனி) | ஏ.பொற்கொடி, தமிழக பகுஜன் சமாஜ் கட்சி |
| 16 | எழும்பூர் (தனி) | அபிஷேக் ரங்கசாமி, தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்இளைஞர் அணிச் செயலாளர் |
| 17 | ஆலங்குடி | தன.விமல், புதுகோட்டை வடக்கு மாவட்ட புரட்சி தலைவர்பேரவை இணைச் செயலாளர் |

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் சூழலில், இவருக்கு எதிராக பி.சந்தானகிருஷ்ணன் களம் காண்கிறார். இதேபோல் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதி ராஜாராம் களம் காண்கிறார்.
இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு 2ஆம் இடம் பிடித்தார். அப்போது 35,138 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். ஆயிரம் விளக்கு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ மருத்துவர் எழிலன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி போட்டியிடுவது கவனிக்கத்தக்கது. துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவை எதிர்த்து ராயபுரம் ஆர்.மனோ போட்டியிடுகிறார்.
ஆலந்தூர் தொகுதி திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் களம் காணும் நிலையில் அவருக்கு எதிராக எஸ்.சரவணனை அதிமுக நிறுத்தியுள்ளார். எழும்பூர் தனித் தொகுதியில் திமுக பரந்தாமனுக்கு பதிலாக தமிழன் பிரசன்னாவிற்கு வாய்ப்பளித்துள்ளது. இவருக்கு எதிராக அபிஷேக் ரங்கசாமி போட்டியிடுகிறார். திருச்சுழி தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடவுள்ள நிலையில், அவருக்கு எதிராக எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் களம் காண்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் தனது கணவரின் கொலைக்கு நீதி கேட்டு போராடி வருகிறார். இதற்கு அதிமுக தரப்பு தொடர்ந்து உறுதுணையாக நின்று வருகிறது. இத்தகைய சூழலில் திரு.வி.க நகரில் பொற்கொடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
